பஞ்சாபின் நட்சத்திர நடிகரும் பாடகருமான தில்ஜித் தோசன்ஜ் பேசியது குறித்து... தில்ஜித் தோசன்ஜ் - படம்: எக்ஸ் / தில்ஜித் தோசன்ஜ் பஞ்சாபின் நட்சத்திர நடிகரும் பாடகருமான தில்ஜித் தோசன்ஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில், “என்னைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களுக்கு நான் அஞ்சப்போவதில்லை” எனக் கூறியுள்ளார். தில்லி நேரு திடலில் நடந்து முடிந்த தில்ஜித் தோசன்ஜின் ’ஆரா இந்தியா டூர்’ என்ற இசை நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் இன்ஸ்டாகிராமில் லைவ் விடியோவில் பேசினார். அதில் தனது ஓய்வை மற்றவர்கள் முடிவெடுக்க முடியாது எனப் பேசியுள்ளார். தில்ஜித் தோசன்ஜ் கமர்ஷியல் மற்றும் கலை ரீதியான படங்கள் எடுத்து பஞ்சாபில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதும் அவருக்கு வழக்கமாக இருக்கிறது. முன்னதாக, 2020ல் விவசாயிகளுக்காக மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினார். பின்னர், பிரதமர் மோடியைச் சந்தித்து போராட்டக்காரர்களுக்கு அதிர்ச்சியும் அளித்தார். இந்தாண்டு மே மாதத்தில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “என்னுடைய வேலை மக்களை மகிழ்விப்பதே. என்னுடைய துறையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” எனக் கூறியிருந்தார். தில்ஜித் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பிரதமர் உடன் எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதுதான் இன்றளவும் அவரது முகப்பில் முதல் பதிவாக பின் செய்யப்பட்டுள்ளது. சிஜேபி போராட்டத்தின்போதும் சிஜேபியின் போராட்டத்தில் இருந்து தான் விலகி இருப்பதாகவும், “நான் ஒரு கலைஞன்தான்; அரசியல்வாதி அல்ல” என்றும் இன்ஸ்டாகிராமில் கூறியிருந்தார். அவரது சட்லஜ் படம் வெளியாகாமல் இருப்பதும் பேசுபொருளானது. பின்னர், ஜீ5 தளத்தில் வெளியாகி 2 நாள்களில் நீக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் இன்ஸ்டாவில் கூறியிருப்பதாவது: செய்தி சேனல்களில் என்னை வைத்து சிலர் நகைச்சுவை செய்வது தெரியும். எதிர்மறையான ஆற்றல்களால் நான் ஓய்ந்துவிடமாட்டேன். இங்குதான் இருக்கிறேன். 25 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறேன். நான் நினைக்கும்போது மட்டுமே இதை நிறுத்துவேன். யாருடைய கேள்விக்கும் நான் பதில் அளிக்கப்போவதில்லை. ஆனால், அதற்காக நான் அச்சப்படுகிறேன் என அர்த்தமில்லை. நான் யாருக்கும் எதையும் சொல்லப்போவதில்லை. எனக்காகவே இந்தியாவில் பல பிரச்னைகள் வருகின்றன. ஏன் என்று தெரியவில்லை. இருந்தும் இந்தமுறை தில்லி காவல்துறை, சிஆர்பிஎஃப் வீரர்கள் எனக்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்தார்கள். அவர்களுக்கு நன்றி. நான் கலைஞன் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும். போர்க்களத்தில் எப்படி சண்டையிட வேண்டுமென பஞ்சாபியர்களுக்குக் கற்றுத் தராதீர்கள். சட்லஜ் படத்துக்காக நாங்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். என்னை வெறுப்பவர்கள் வெறுக்கட்டும். என் பக்கத்தில் இருந்து அன்பு மட்டுமே என்றார். இந்தப் படம் முன்னதாக பஞ்சாப் 95 என பெயரிடப்பட்டுருந்தது. இதில் அவர் ஜஸ்வந்த் சிங் கல்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1980 -1990களில் பஞ்சாபில் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டவர்கள் பற்றிய படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. DELHI FANS ð«¶AURA INDIA TOUR ð®ð³ 2026 Next INDORE pic.twitter.com/8HJA4YRrbu தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பஞ்சாபியர்களுக்குச் சண்டையிடத் தெரியும்; யாருக்காகவும் அச்சப்பட மாட்டேன்: தில்ஜித் தோசன்ஜ்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗