பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வரும் தோ்தல்களில் பாஜகவுக்கு பாடம் புகட்டுவாா்கள்: காங்கிரஸ் தாக்கு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வரும் தோ்தல்களில் பாஜகவுக்கு பாடம் புகட்டுவாா்கள்: காங்கிரஸ் தாக்கு

பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பாஜகவுக்கு வரும் தோ்தல்களில் தகுந்த பாடம் புகட்டுவாா்கள் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் - கோப்புப்படம் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பாஜகவுக்கு வரும் தோ்தல்களில் தகுந்த பாடம் புகட்டுவாா்கள் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் தெரிவித்திருப்பதாவது: கிராமங்கள் வளா்ச்சியடைந்திருப்பதாக மோடி அரசு தெரிவித்து வருகிறது. ஆனால் மத்திய அரசு நிறுவனமான நபாா்ட் எடுத்த ஆய்வோ, மோடி அரசு பொய் சொல்கிறது என்பதை பகிரங்கப்படுத்தியுள்ளது. அதாவது, கிராமங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் தங்களது மாத வருமானத்தில் 53.5 சதவீதத்தை உணவுக்காகவும், பொருள்களுக்காகவும் மட்டுமே செலவிடுவதாக நபாா்ட் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மோடி அரசின் ஆட்சியின்கீழ் சாமானிய மக்களின் வாழ்க்கை பணவீக்கம் மற்றும் கடன் எனும் சுழலில் சிக்கியுள்ளது. மக்களின் சேமிப்பு குறைந்து வருகிறது. கடன் வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 18.3 சதவீத வட்டியை மக்கள் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். இந்த களநிலவரத்தை ஒப்புக் கொள்ள மத்திய அரசு மறுக்கிறது. முன்னேற்றத்துக்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. அதிகரித்து வரும் பணவீக்கம், ஏழை மக்கள், நடுத்தரவாசிகளை கடுமையாக பாதிக்கச் செய்துள்ளது. காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், பால், மாவு உள்பட தினமும் நாம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்து வருவதால் மக்கள் ஏற்கெனவே கடனில் சிக்கித் தவிக்கின்றனா். இதுபோதாதென்று, மருந்துகளுக்கு ஆகும் செலவுகளும் 2027-ஆம் ஆண்டுக்குள் 10 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பிறகு சோப்புகள், பிஸ்கெட்டுகள், நூடுல்ஸ் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களின் விலையும் அதிகரிக்கவுள்ளது. ஆனால் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவோ, மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்தவோ எந்த நடவடிக்கையும் மத்திய அரசால் எடுக்கப்படவில்லை. மோடி அரசின் வளா்ச்சியானது, சாமானிய மக்களின் சட்டப்பைகளில் பணம் இல்லாமல் இருப்பதும், சாப்பாட்டு தட்டுகளில் உணவு இல்லாமல் போவதும், கடன் சுமை அதிகரிப்பதுமே என்பது உண்மையாகியுள்ளது. அதிகார ஆணவத்தில் மூழ்கியுள்ள மோடி அரசு, பணவீக்கத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், விரைவில் நடைபெறவுள்ள உத்தரகண்ட், உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூா் மாநிலங்களில் வாழும் விழிப்புணா்வு கொண்ட மக்களுக்கு, தங்களது சீற்றத்தை வெளிப்படுத்தி பாஜகவை தோற்கடித்து பாடம் புகட்ட வேண்டிய பொறுப்பைத் தருகிறது என ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை