இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி... நேற்று பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்த நிலையில் இன்று (அக். 29) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,268.47 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 522.43 புள்ளிகள் உயர்ந்து 73,768.46 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 138.45 புள்ளிகள் உயர்ந்து 22,837.30 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.24 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.02 சதவீதமும் உயர்ந்தன. துறை சார்ந்த குறியீடுகளில், நிஃப்டி ஐடி, பொதுத்துறை வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் குறியீடுகள் சிறப்பாகச் செயல்பட்டு தலா 0.5 சதவீதத்திற்கும் மேலாக லாபமடைந்தன. மறுபுறம் நிஃப்டி கெமிக்கல்ஸ், சிமெண்ட், ஆட்டோ குறியீடுகள் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 30 பங்குகளில் அதானி போர்ட்ஸ், டிசிஎஸ், பாரதி ஏர்டெல், பவர் கிரிட், ஹெச்சிஎல் டெக், என்டிபிசி உள்ளிட்ட 17 பங்குகள் உயர்ந்தும் எல்&டி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட மற்ற பங்குகள் சரிந்தும் வர்த்தகமாகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.17 ஆகத் தொடங்கியுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பங்குச்சந்தை சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗