இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி... பங்குச்சந்தை வணிகம் - கோப்புப்படம் நேற்று பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்த நிலையில் இன்று (அக். 30) சரிந்து பின்னர் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,199.69 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.45 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 380.96 புள்ளிகள் உயர்ந்து 74,532.00 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 114.95 புள்ளிகள் உயர்ந்து 74,532.00 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. நிஃப்டி50 குறியீட்டில் ட்ரென்ட், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், இன்டர்குளோப் ஏவியேஷன் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன. நிஃப்டி மிட்கேப் 100, நிஃப்டி ஸ்மால்கேப் 100 முறையே 0.54 சதவீதம், 0.86 சதவீதம் சரிந்தன. துறைவாரியாக, நிஃப்டி ஐடி பங்குகள் அதிக லாபம் அடைந்துள்ளன. இத்துடன் பார்மா பங்குகளும் லாபத்தில் உள்ளன. அதே நேரத்தில் நிஃப்டி நுகர்வோர் பொருள்கள் பங்குகள் அதிகபட்சமாக சரிந்தது. கச்சா எண்ணெய் விலை அதிகமாக உள்ள நிலையிலும் ஐடி பங்குகளின் அதிக லாபத்தால் இன்று பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின்றன. சென்செக்ஸ் 30 பங்குகளில் டிரெண்ட், இன்போசிஸ், சன் பார்மா, இண்டிகோ, டெக் மஹிந்திரா உள்ளிட்ட 14 பங்குகள் உயர்ந்தும் எல்&டி, ஆக்சிஸ் வங்கி, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட மற்ற பங்குகள் சரிந்தும் வர்த்தகமாகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.22 ஆகத் தொடங்கியுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பங்குச்சந்தை சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் வர்த்தகம்! ஐடி பங்குகள் 2% லாபம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗