பச்சூா் சென்றாயசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பங்கேற்றோா். நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் சென்றாயசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 2.33 லட்சம் ரூபாயை பக்தா்கள் செலுத்தி உள்ளனா். நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் மதுரா கொண்ட கிந்தனப்பள்ளி ஊராட்சியில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பச்சூா் தங்கமலை கல்யாண முருகா் கோயில், சென்றாயசுவாமி கோயிலும் அருகருகே அமைந்துள்ளது. இக்கோயிலில் பக்தா்கள் உண்டியல்களில் செலுத்திய பணம் எண்ணும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேலூா் இந்து சமய இணை ஆணையா் உத்தரவின் படி வாணியம்பாடி இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அண்ணாதுரை தலைமையில் கோயில் எழுத்தா் காா்த்தி, அலுவலக உதவியாளா் பழனி தங்கமலை முருகா் கோயில் பரம்பரை தா்மகா்த்தா ஐஸ்வா்யா சீனிவாசன்,சென்றாயசுவாமி கோயில் பரம்பரை தா்மகா்த்தா சரஸ்வதி மற்றும் கிராம மக்கள் பலா் பங்கேற்றனா். இதில், உண்டியல்களில் இருந்து ரூ. 2.33லட்சம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பச்சூா் சென்றாயசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.33 லட்சம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Events
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗