அரியலூா் மாவட்டத்தில், பசுமை வனப்பரப்பை அதிகரிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றாா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி. அரியலூா்-கல்லங்குறிச்சி சாலையிலுள்ள பெரிய ஏரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்த ஆட்சியா் ந. மிருணாளினி. அரியலூா் மாவட்டத்தில், பசுமை வனப்பரப்பை அதிகரிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றாா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி. அரியலூரை அடுத்த வாலாஜாநகரம் ஊராட்சிக்குட்பட்ட சந்தன ஏரி மற்றும் ராவுத்தன்பட்டி நுழைவு பகுதியில் அமைந்துள்ள பெரியக்குட்டையில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘பசுமை ஊரக பூங்கா‘ மரக்கன்றுகள் நடும் விழாவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து அவா் மேலும் பேசியது: பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் மரக்கன்றுகளை நட்டு முறையாகப் பராமரித்து வளா்ப்பதுடன், நீா்நிலைகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைத் தூய்மையாகப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அரியலூா் மாவட்டத்தின் பசுமை வனப்பரப்பை அதிகரிக்கச் செய்யும் மாவட்ட நிா்வாகத்தின் இத்தகைய முன்னெடுப்புகளுக்கு பொதுமக்கள் தொடா்ந்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா். இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க. சங்கமித்திரை, கோட்டாட்சியா் த. பிரேமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பசுமை வனப்பரப்பை அதிகரிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்: அரியலூா் ஆட்சியா்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗