பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது பற்றி... பசும்பொன் தேவரின் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை - X ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் அவரின் திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் குருபூஜையையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பசும்பொன் சென்ற மு.க. ஸ்டாலின், அங்கு தேவரின் நினைவிடத்தில் குருபூஜையில் கலந்துகொண்டு தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗