“பசும்பொன்னுக்கு பிரதமர் மோடி ஒருநாள் வருவார்” - குடியரசு துணைத் தலைவர் தகவல்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
“பசும்பொன்னுக்கு பிரதமர் மோடி ஒருநாள் வருவார்” - குடியரசு துணைத் தலைவர் தகவல்

படம்:என்.தங்கரெத்தினம் கமுதி: “பிரதமர் மோடி பசும்பொன்னுக்கு ஒரு நாள் வந்து தேவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துவார்” என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, இன்று காலை தேவர் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேவர் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டார். மேலும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வரிசையில் நின்ற பொதுமக்களிடம் கை கொடுத்து வணக்கம் தெரிவித்தார். இந்நிகழ்வில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் கயிறு வாரிய தலைவர் குப்புராமு, பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, மாவட்ட தலைவர் முரளிதரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பின்னர் குடியரசு துணைத் தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுதந்திர போராட்ட காலத்தில் மட்டுமில்லாமல் அதற்குப் பிறகும் சமுதாயத்திற்காக தன் வாழ்வின் குறிக்கோளாக முழு மூச்சாக செயல்பட்டவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை தலைவராக ஏற்றுக் கொண்டவர். தேசத்தின் எழுச்சிக்கும், தெய்வீக எழுச்சிக்கும் தமிழக மண்ணில் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். அவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு எந்த துரோகத்தையும் செய்ய விரும்பவில்லை. அவர் மட்டும் அரசியலில் சமரசம் செய்திருந்தால் தமிழகத்தின் முதல்வராக முத்துராமலிங்கத் தேவர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பார். தன் வாழ்நாள் முழுவதும் நேர்மை, தவம், கண்ணியம் மிகுந்த வாழ்க்கை வாழ்ந்தவர். ஆதிதிராவிட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். அம்மக்களுக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவாயில் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர். தன்னுடைய சொத்தில் பெரும் பகுதியை ஆதிதிராவிட மக்களுக்காக கொடுத்துள்ளார். இப்படி மகத்தான தேசிய தலைவரின் பிறப்பும், இறப்பும் ஒரே நாளில் நடத்திருப்பது, மகா சித்த புருஷர் என்பதை நிரூபிக்கிறது. உண்மையான தேசியமும், தெய்வீகமும் என்றைக்கும் அழியாமல் பாதுகாப்பது நமது கடமையாகும். அவருக்கு நாம் தொடர்ந்து அஞ்சலி செலுத்த வேண்டும். பசும்பொன்னுக்கு ஒரு நாள் பிரதமர் மோடி வருகை தந்து தேவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துவார் என தெரிவித்தார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை