பதற்றமில்லா பயணம்!

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
பதற்றமில்லா பயணம்!

உடல்நலக் குறைபாடு காரணமாக ஏற்படும் சிரமங்களைக் குறைத்து அவர்களும் மற்றவர்களைப்போல தன்னம்பிக்கையுடன் பயணம் செய்ய வகை செய்கின்றன. முகநூலில் ஒரு காணொலியைப் பார்த்தேன். அதில் விமானத்துக்குள் செல்ல வேண்டிய வாயிலின்முன் ஏகப்பட்ட இந்தியர்கள் சக்கர நாற்காலியில் காத்திருந்ததைக் காண முடிந்தது. அது குறித்துப் பேசிய ஒரு வெளிநாட்டவர், இந்தியாவில் நல்ல உடல் நலனுடன் இருப்பவர்கள்கூட சக்கர நாற்காலி சேவையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால், அவசியமானவர்களுக்கு இந்தச் சேவை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது என்று ஆதங்கப்பட்டார். அந்தக் காணொலியில் வயதானவர்கள் ஒரு சிலரே இருந்தார்கள்; மற்றவர்கள் நடுத்தர வயதுக்காரர்கள்; ஆரோக்கியத்துடன் காணப்பட்டார்கள். ஆகவேதான், அந்த வெளிநாட்டவர் அவ்வாறு கூறினார். ஒருகாலத்தில் வெளிநாட்டுக்குப் போவது பெருமை. அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டாது. தற்போது விமானப் பயணம் பேருந்து பயணம்போல ஆகிவிட்டது. அதிக விவரமில்லாதவர்கள், வெளி உலகப் பரிச்சயம் இல்லாதவர்கள், ஆங்கிலம் தெரியாதவர்கள் எல்லோரும் சர்வசாதாரணமாக தனியாக வெளிநாடு போய் வருகிறார்களே, எப்படி? என்று நான் முன்பெல்லாம் வியந்ததுண்டு. அதன் பின்னரே இந்த சக்கர நாற்காலி சேவை குறித்து தெரியவந்தது. இது எத்தகைய ஓர் அற்புதமான சேவை. விமான முனையத்தின் பிரம்மாண்டமும் நடைமுறைகளும் முதியவர்களுக்கு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தும். கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல் ஒன்றும் புரியாது. சாமான்களை ஒப்படைப்பது, குடியேற்றம், பாதுகாப்பு சோதனை போன்ற இடங்களில் தடுமாறிப் போவார்கள். சக்கர நாற்காலி சேவையைப் பயன்படுத்திக் கொண்டால் எந்தக் கவலையும் இல்லை; சங்கடமில்லாமல் செல்ல முடிகிறது. சக்கர நாற்காலி சேவையால், தான் பட்ட சிரமத்தை உறவினர் ஒருவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தன் வயதான பெற்றோரை அவர் லண்டனில் இருந்து தோஹா வழியாக சென்னைக்கு அனுப்பினார். லண்டனில் அவர்களை ஏற்றிவிட்டார். அவர்கள் தோஹாவில் இறங்கி சென்னை விமானத்துக்கு மாறவேண்டும். தனியாக அனுப்புகிறோமே என்று சக்கர நாற்காலி சேவை போட்டுவிட்டார். தோஹா விமான நிலையம் சென்றடையும்வரை எல்லாம் ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்தது. தோஹாவில் விமானம் இறங்கியவுடன், விமான பணிப்பெண் "சக்கர நாற்காலிக்காரர்கள் காத்திருக்கவும், கீழே இறங்க வேண்டாம்' என்று கூறிவிட்டார்; ஆறு பேர் மட்டும் தங்கிவிட்டார்கள்; அடுத்து சென்னை விமானத்தைப் பிடிக்க ஒரு மணி நேர அவகாசம் மட்டுமே இருந்த நிலையில் அனைவரும் பதற்றமடைந்தனர். ஒருவரும் வரவில்லை 30 நிமிஷங்கள் கழித்து இவர்களை ஒரு வாகனத்தில் ஏற்றி வாயிலருகே விட்டுவிட்டார்கள்; விமானம் போய் விட்டது; இவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?, என்ன செய்வது என்று ஒன்றும் விளங்கவில்லை. அந்த நிறுவன கவுன்ட்டருக்குப் போய் கேட்டபோது சரியான பதில் கிடைக்கவில்லை. சென்னைக்கு மறுநாள் மாலை 6 மணிக்குத்தான் விமானம் என்று சொல்லியிருக்கிறார்கள். அங்குமிங்கும் ஓடி கொஞ்சம் கனிவான முகம் தென்பட உதவி கோரி தவித்துப் போயிருக்கிறார்கள். மறுநாள் மாலை 6 மணிவரை உண்மையில் தொலைந்து போய் விட்டவர்கள் நிலை என்று சொல்லலாம். பின்னர், விமானத்தைப் பிடித்து வந்து சேர்ந்திருக்கிறார்கள். ஆகவே, சக்கர நாற்காலி போட்டாலும் அவஸ்தைப்பட வேண்டும் என்று இருந்தால் பட்டே ஆகவேண்டும். விமான நிலையங்களில் உள்ள அறிவிப்புப் பலகைகள் பெரும்பாலும் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் மட்டுமே இருக்கும். ஆகவே, விமானப் பயணம் புதியவர்களை மன ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் பெரிதும் அச்சுறுத்துகிறது. ஏதாவது தவறு நேர்ந்துவிட்டால் என்ற கற்பனையும் பயமும் சேர்ந்து கொள்கிறது. மற்ற பயணிகளின் நடவடிக்கைகள், தோற்றம் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. சட்டென்று அவர்களிடம் எதையும் கேட்க முடிவதில்லை. உள்ளூரிலேயே ஏதோ அந்நிய நாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வு அல்லவா ஏற்படுகிறது?. ஆகவே, சக்கர நாற்காலி சேவை இந்த சங்கடங்களையெல்லாம் தவிர்த்து விடுகிறது. மேலும், இந்த சேவை இலவசம். நடக்க முடியாதவர்கள், உடல் நலமில்லாதவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், முதியவர்கள் ஆகியோருக்குப் பேருதவியாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, இன்னொரு சேவையும் உள்ளது. அது "மீட் அண்ட் கிரீட்' என்பது. இது பரவலாக அறியப்படவில்லை. அது என்ன வசதி?. அதாவது, பயணிகள் விமான நிலையத்தில் எந்தவித சிரமமும் இன்றி எளிதாகப் பயணிக்க உதவும் ஒரு சிறப்பு உதவி சேவையாகும். பெரிய விமான நிலையங்களில் வழிவகை தெரியாமல் திணறுபவர்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், முதல்முறை பயணம் செய்பவர்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் பயணம் செய்பவர்களின் பயணத்தை இந்தச் சேவை எளிதாக்குகிறது. விமான நிலையத்துக்கு வந்தவுடன் அல்லது விமானத்தில் இருந்து இறங்கியவுடன் ஒரு பிரதிநிதி நம் பெயர் கொண்ட பதாகையுடன் நிற்பார். நீண்ட வரிசையில் நிற்காமல் பாதுகாப்புப் பரிசோதனை மற்றும் குடியேற்றப் பரிசோதனை போன்றவற்றை விரைவாக முடிக்க உதவுவார். சாமான்களை எடுத்துக் கொள்ளவும் உதவியாளர் இருப்பார். ஒரு விமானத்தில் இருந்து வேறு விமானத்துக்கு மாற வேண்டி இருந்தால் அதற்கான வழிகாட்டலையும் செய்வார். இந்தச் சேவையைப் பெற விமான நிலைய அதிகாரபூர்வ இணையதளம் மூலமாகவோ அல்லது தனியார் பயண நிறுவனங்கள் மூலமாகவோ முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம். எல்லோரும் சக்கர நாற்காலிக்கு விண்ணப்பிப்பதற்குப் பதில் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டணம் உண்டு என்பதற்காக தயங்கக்கூடாது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து வெளிநாடு போகிறோம். செலவு கூடுதலாக ஆனால்தான் என்ன? விமான நிலையத்தில் சக்கர நாற்காலி உதவியும் "மீட் அண்ட் கிரீட்' மற்றும் கட்டண பயணப் பை உதவி கோரும் தொடர்புடைய தகவல்களுடன் அதிகாரபூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளன. சக்கர நாற்காலி உதவிக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போதே தொடர்புடைய விமான நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கலாம். "மீட் அண்ட் கிரீட்' சேவைக்கு விமான நிலைய சேவை வழங்குநரிடம் கிடைக்கும் வசதிகள், முன்பதிவு நடைமுறை, கட்டணம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். பயணப் பைகளை எடுத்துச் செல்லஉதவியும், இந்தச் சேவையில் தானாக அடங்கி இருக்கிறதா? என்பதைத் தனியாகக் கேட்க வேண்டும். இத்தகைய சேவைகள் மனிதநேயத்தின் அடையாளங்கள். பிறரின் உதவியின்றி நீண்ட தொலைவு நடக்க முடியாத ஒருவர், விமான நிலையத்தில் ஒருமுனையில் இருந்து மற்றொரு முனைக்கு சிரமமின்றி செல்லவும், விமானத்தில் ஏறவும், இறங்கிய பிறகு தனது பயணத்தைத் தொடரவும் இவை துணை புரிகின்றன. உடல்நலக் குறைபாடு காரணமாக ஏற்படும் சிரமங்களைக் குறைத்து அவர்களும் மற்றவர்களைப்போல தன்னம்பிக்கையுடன் பயணம் செய்ய வகை செய்கின்றன. ஆனால், இங்கு ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது; நலமுடன் இருப்பவர்கள் ஏன் சக்கர நாற்காலி உதவியைக் கேட்க வேண்டும்?, இவ்வாறு பொத்தாம் பொதுவாகக் குற்றஞ்சாட்டுவது தவறு. இந்த உதவி ஆடம்பர வசதியோ அல்லது வரிசையைத் தவிர்ப்பதற்கான குறுக்கு வழியோ அல்ல. உடல் இயக்கத்தில் சிரமம் உள்ளவர்கள் கண்ணியத்துடன் பயணம் செய்வதற்கான அவசியமான உதவியாகும். விரைவில் போய் விடலாம் என்பதற்காக இந்த உதவியைப் பயன்படுத்துவது தவறு. ஒரு வசதி நமக்கு நேரத்தை மிச்சப்படுத்துகிறது என்பதற்காக மட்டும் அதைப் பயன்படுத்துவது சரியல்ல. முதியவர்களைத் தனியாக அனுப்பும்போது நேரடி விமான சேவையே சிறந்தது. அதில் இடம் கிடைக்கவில்லை அல்லது கட்டணம் அதிகம் என்றாலோ விமானம் மாறிச் செல்ல வகை செய்யலாம். அப்படி மாறும்போது குறைந்தது 2 மணி நேரமாவது கண்டிப்பாக இடைவெளி இருக்குமாறு பயணச்சீட்டை முன்பதிவு செய்ய வேண்டும். குறைந்த அவகாசத்தில் அவர்களைப் பதற்றமடைய வைக்கக் கூடாது. அதேபோல, அவர்கள் எந்த நாட்டில் விமானம் மாற உள்ளார்களோ அந்த நாட்டின் பணம் அவர்களிடம் சிறிது அளவாவது இருக்க வேண்டும். அவசரத் தேவை ஏற்பட்டால் அவர்கள் சிரமப்படக் கூடாது. முக்கியமான மருந்துகளை உடன் வைத்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். கைப்பேசியில் முழு சார்ஜ் இருக்குமாறு பார்த்துக் கொள்ள சொல்ல வேண்டும். அந்த நாட்டில் யாரேனும் தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களின் கைப்பேசி, தொலைபேசி எண்களைக் குறித்துக் கொடுக்க வேண்டும். சிரமமோ, பயமோ இன்றி அவர்கள் பயணிப்பது மிக மிக அவசியம். விமான நிலையங்களில் சக்கர நாற்காலிகளின் எண்ணிக்கை, உதவியாளர்களின் எண்ணிக்கை, ஒரே நேரத்தில் சேவை பெறும் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவை வரையறுக்கப்பட்டிருக்கலாம். அப்போது உண்மையிலேயே நடக்க முடியாமல் தவிக்கும் ஒருவருக்கு தாமதம் ஏற்படுவது வேதனைக்குரியது. பொதுவரிசையைத் தவிர்க்க "டிஜியாத்ரா' என்ற செயலியை வீட்டிலேயே பதிவிறக்கம் செய்து விமான நிலையத்தில் பயன்படுத்தலாம். ஒருவர் தனக்குத் தேவையில்லாத உதவியை, அதாவது சக்கர நாற்காலி சேவையைப் பெறுவது மற்றொருவருக்கு தேவையான உதவி கிடைப்பதில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும்; இந்த சிந்தனை நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை