ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா - நிதி ரஸ்தான் திருமணம் பற்றி... ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, பிரபல பத்திரிகையாளர் நிதி ரஸ்தானை திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவரும் தங்களது திருமணம் தொடர்பான புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, இத்தகவலை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஒமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் அப்புகைப்படத்தைப் பகிர்ந்து நேற்று புதிய பயணம் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார். இவர்களது திருமணம் நேற்று (அக். 30) சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் நடைபெற்றது. ஒமர் அப்துல்லா - நிதி ரஸ்தான் இருவருக்கும் இது இரண்டாம் திருமணமாகும். ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் மகனும், தற்போதைய முதல்வருமான ஒமர் அப்துல்லா, கடந்த 1994-ஆம் ஆண்டு பாயல் நாத் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2009-ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஜூலை 31-ஆம் தேதி ஒமர் அப்துல்லா - பாயல் நாத் தம்பதியருக்கு உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இதையடுத்து, நிதி ரஸ்தானை ஒமர் அப்துல்லா தற்போது திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பத்திரிகையாளரை மணந்த ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗