பட்டாசு வெடிக்கும் போது பிரகாசமான ஒளியும், சத்தமும் வெளிப்படுவது எப்படி?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
பட்டாசு வெடிக்கும் போது பிரகாசமான ஒளியும், சத்தமும் வெளிப்படுவது எப்படி?

பட மூலாதாரம், Archived photo காகிதத்தில் சுற்றப்பட்ட இவ்வளவு சிறிய ஒரு பொருள் எப்படி இவ்வளவு பெரிய வெடிப்பையும் ஒளியையும் ஏற்படுத்த முடியும்? அதுவும் சில நொடிகளில். மாசுபாட்டை ஏற்படுத்தி, உடல்நலத்தைப் பாதிக்கக்கூடிய இந்தச் சிறிய பட்டாசில் அப்படி என்ன இருக்கிறது? அறிவியல் ரீதியாகப் பார்த்தால், பட்டாசு என்பது ஒரு சிறிய வெடிமருந்துத் தொழில்நுட்பக் கருவி. சில குறிப்பிட்ட வேதிப்பொருட்களைக் கொண்ட இந்தப் பொருள், தீப்பற்ற வைக்கப்படும்போது ஒளி, ஒலி, புகை, வெப்பம், தீப்பொறிகள் அல்லது இயக்கம் போன்ற விளைவுகளை உருவாக்குகிறது. பட மூலாதாரம், Getty Images பட்டாசின் காகித உறையைப் பிரித்துப் பார்த்தால், கருப்பு அல்லது சாம்பல் நிறத்தில் ஒரு பொடி இருக்கும். அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன? எரிபொருள் : நிலக்கரி மற்றும் கந்தகம் போன்றவை எரிபொருளாகச் செயல்படுகின்றன. ஆக்ஸிஜனேற்றி: எரிபொருள் எரிவதற்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்கும் பொருள் இது. பொதுவாக நெருப்பு எரிவதற்கு வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன் உதவுகிறது. ஆனால் பட்டாசில் ஆக்ஸிஜன் ஏற்கெனவே இருக்கிறது. இது பொட்டாசியம் நைட்ரேட்டிலிருந்து கிடைக்கிறது. இதனால்தான் இறுக்கமாக மூடப்பட்ட உறைக்குள் இருந்தாலும் பட்டாசு விரைவாக எரிகிறது. உறை: இறுக்கமாகச் சுருட்டப்பட்ட காகிதம் அல்லது சில நேரங்களில் அட்டைப் பெட்டி போன்ற பொருட்களால் இது தயாரிக்கப்படுகிறது. இந்த உறை உள்ளே அழுத்தம் உருவாக உதவுகிறது. பட்டாசு திரியில் தீப்பற்ற வைக்கும்போது, அதிலிருந்து உருவாகும் தீப்பொறி முக்கிய வேதிப்பொருட்களைச் சென்றடைகிறது. End of அதிகம் படிக்கப்பட்டது பொட்டாசியம் நைட்ரேட், கரி மற்றும் கந்தகத்துடன் வினைபுரியும் போது ஆக்ஸிஜன் வெளியிடப்படுகிறது. இதனால் வேதியியல் வினை நிகழ்ந்து அதிக அளவு வெப்பமும் சூடான வாயுக்களும் உருவாகின்றன. இதுவே எரிதல் எனப்படுகிறது. ஆனால் இவை அனைத்தும் இறுக்கமாக மூடப்பட்ட உறைக்குள் நடைபெறுகின்றன. உள்ளே உருவாகும் சூடான வாயுக்கள் மிகக் குறுகிய நேரத்தில் அழுத்தத்தை அதிகரிக்கின்றன. அழுத்தம் அதிகரிக்கும் போது பட்டாசின் வெளிப்புற உறை வெடித்துச் சிதறுகிறது. அப்போது வாயுக்கள் திடீரென வெளியேறி, தீவிரமான அழுத்த அலைகளை உருவாக்குகின்றன. இதன் விளைவாகவே வெடிச்சத்தம் கேட்கிறது. எரியும் துகள்கள் மற்றும் வாயுக்களிலிருந்து பிரகாசமான ஒளியும் வெளிப்படுகிறது. பட மூலாதாரம், Getty Images பட்டாசுகளில் வெவ்வேறு உலோகச் சேர்மங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெவ்வேறு நிறங்கள் உருவாக்கப்படுகின்றன. போன்ற பல்வேறு சேர்மங்கள் இதில் அடங்கும். பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு பட்டாசுகளுக்கு அதிக சத்தத்தையும் பல்வேறு நிறங்களையும் ஒளியையும் கொடுக்கும் அதே வேதியியல் செயல்முறைகள்தான் ஒலி, காற்று, மண் மற்றும் நீர் மாசுபாட்டுக்கும் காரணமாகின்றன. பட்டாசு வெடிக்கும்போது மிக நுண்ணிய மற்றும் பெரிய அளவிலான துகள்கள் வளிமண்டலத்தில் கலக்கின்றன. இவற்றில் PM2.5, PM10 போன்ற நுண்துகள்களும் அடங்கும். பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களிலிருந்து ஈயம், கந்தக டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் உள்ளிட்ட வாயுக்கள் காற்றில் கலக்கின்றன. உலோகங்கள் கலந்த புகையும் தூசும் வெளியேறுகின்றன. இதனால்தான் பட்டாசுகள் வெடிக்கப்பட்ட உடனேயே காற்றின் தரம் மோசமடைகிறது. மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளிலும் காற்றோட்டம் இல்லாத இடங்களிலும் இந்த மாசு தேங்கிவிடுகிறது. இந்த நச்சுத் துகள்கள் சுவாசத்தின் மூலம் உடலுக்குள் சென்றால் நுரையீரலைச் சென்றடையலாம். பட்டாசுப் புகை கண்கள், மூக்கு, வாய் மற்றும் சுவாசப் பாதையில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. பட்டாசுகள் வெடித்த பிறகு அவற்றின் எஞ்சிய பொருட்கள் தரையில் கிடக்கின்றன. அவை மண்ணுடன் கலக்கின்றன. ஆறுகள், ஏரிகள் அல்லது கடற்கரைப் பகுதிகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடித்தால், இந்த வேதிப்பொருட்கள் நீரிலும் கலக்கின்றன. அதுமட்டுமின்றி, பட்டாசுகளை வெடிக்கும்போது காதுகளைப் பாதிக்கும் அளவுக்கு அதிகமான சத்தமும் உருவாகிறது. ஒலி மாசுபாட்டைக் குறைப்பதற்காகப் பணியாற்றும் ஆர்வலர் சுமைரா அப்துலாலி கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாகப் பட்டாசுகளின் ஒலி அளவு 125 டெசிபல் என்ற வரம்புக்குள் இருந்தாலும், அவற்றில் உள்ள நச்சுக் கூறுகள் மற்றும் நச்சு வாயுக்களின் வெளியேற்றம் குறையவில்லை என்கிறார். பட மூலாதாரம், Getty Images பட்டாசுகளால் ஏற்படும் ஒலி மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தாமாக முன்வந்து விசாரித்த பம்பாய் உயர் நீதிமன்றம், மகாராஷ்டிர மாநிலத்தில் பொது இடங்கள், நடைபாதைகள், சாலைகள் மற்றும் தெருக்களில் பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் பட்டாசுகளுக்குத் தடை விதிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றமும் கருத்துத் தெரிவித்துள்ளது. பட்டாசுகளுக்கு முழுமையான தடை விதிக்கவில்லை என்றாலும், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்கு நீதிமன்றத்தைத் தள்ள வேண்டாம் என்று நிர்வாக அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பட்டாசுப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பட்டாசுகள் இல்லாமல் தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விராட் கோலி போன்ற பிரபலங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதாவது, ஒரு பட்டாசு வெடித்த சில நொடிகளிலேயே அதன் தாக்கம் முடிந்துவிடுவதில்லை. அதன் பாதிப்புகள் நீண்ட காலம் நீடிக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை