பட்டாசுகளை ஆன்லைனில் வாங்குவது ஏன் ஆபத்தானது? வாடிக்கையாளர்கள் கவனமாக இருப்பது எப்படி?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
பட்டாசுகளை ஆன்லைனில் வாங்குவது ஏன் ஆபத்தானது? வாடிக்கையாளர்கள் கவனமாக இருப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images தீபாவளி நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், சமூக ஊடகங்களில் 'குறைந்த விலையில் சிவகாசி பட்டாசுகள், வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்யுங்கள்' என்ற வகையிலான விளம்பர 'ரீல்' காணொளிகளை அதிகம் பார்க்க முடிகிறது. அதிலும், '90% தள்ளுபடியில் தீபாவளி கிஃப்ட் பாக்ஸ்', '10 ரூபாயிலிருந்து சிவகாசி பட்டாசுகள்' போன்ற விளம்பரக் காணொளிகள் பிரபல இன்ப்ளுயன்ஸர்கள் பலராலும் பகிரப்படுகின்றன. மறுபுறம், 'பட்டாசுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து, பணம் செலுத்தியும் இன்னும் பட்டாசுகள் வரவில்லை' அல்லது 'மோசமான தரமுடைய பட்டாசுகள் அனுப்பப்பட்டுள்ளன' என சில புகார் பதிவுகளையும் பார்க்க முடிகிறது. "ஆன்லைனில் பட்டாசுகளை ஆர்டர் செய்வதிலும், போலியான பட்டாசு விற்பனை விளம்பரங்கள் குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள்" என தமிழக காவல்துறையும் கடந்த சில நாட்களாகப் பல்வேறு சமூக ஊடகப் பதிவுகளில் எச்சரித்து வருகிறது. கடந்த 2024இல், ஆன்லைனில் குறைந்த விலைக்கு பட்டாசு விற்பதாகக் கூறப்பட்டதை நம்பிப் பணம் செலுத்தியதில், மோசடி நடந்ததாக 17 வழக்குகள் பதிவாகின. கடந்த வருடமும், இது தொடர்பாக சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வருடம், ஆன்லைன் பட்டாசு மோசடி தொடர்பாக விருதுநகர் மாவட்ட காவல்துறை 13 வழக்குகளைப் பதிவு செய்திருப்பதாக 'தி இந்து' ஆங்கில நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது. 'ஆன்லைன் பட்டாசுகள்' தொடர்பான மோசடிகள் நடப்பது எப்படி? இது தொடர்பாக பட்டாசு விற்பனையாளர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம், Cyber Crime Wing - Tamil Nadu தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப் பிரிவு வெளியிட்டுள்ள விழிப்புணர்வுக் காணொளியில் இத்தகைய மோசடிகள் எப்படி நடக்கின்றன என விளக்கப்பட்டுள்ளது. "மக்கள் சமூக ஊடகங்களில் குறைந்த விலையில் பட்டாசுகள் என்ற விளம்பரத்தைப் பார்த்து, 'வாட்ஸ் ஆப்' மூலம் விற்பனையாளர்களைத் தொடர்பு கொள்கிறார்கள். விற்பனையாளர்கள் பட்டாசு விவரங்களையும் குறைந்த விலைகளையும் காட்டி ஈர்த்து, ஆர்டரை உறுதி செய்ய முன்பணம் கேட்பார்கள்". End of அதிகம் படிக்கப்பட்டது "விளம்பரத்தை நம்பி, அவர் கேட்ட தொகையை மக்கள் ஆன்லைனில் செலுத்துகிறார்கள். பின்னர் வெவ்வேறு பெயர்களில் சில கட்டணங்கள் கோரப்படுகின்றன. அவற்றைச் செலுத்திய பின்பும் பட்டாசுகள் வீட்டிற்கு வருவதில்லை, அதன் பின்னர் விற்பனையாளர்களும் பதிலளிப்பதில்லை" என காவல்துறை தெரிவிக்கிறது. 'சமூக ஊடகங்களில் வரும் மலிவு விலை பட்டாசு விளம்பரங்களை நம்பி முன்பணம் செலுத்தாதீர்கள். ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தால், உடனே 1930 என்ற எண்ணில் அல்லது சைபர் க்ரைம் இணையதளத்தில் புகாரளிக்கவும்' என்றும் காவல்துறை அறிவுறுத்துகிறது. அதேபோல, "இத்தகைய ஆன்லைன் விற்பனையாளர்களுக்கு வங்கிக் கணக்கு விவரங்களை அளிப்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றும் காவல்துறை கூறுகிறது. பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு உச்ச நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு, அர்ஜுன் கோபால் vs இந்திய யூனியன் என்ற வழக்கில், "ஃப்ளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட எந்தவொரு இணைய வணிக நிறுவனமும் பட்டாசுகள் தொடர்பான இணையவழி ஆர்டர்களை பெறவோ, இணையவழியில் விற்பனை செய்யவோ கூடாது. இணையவழியில் பட்டாசுகளை விற்பனை செய்யும் இணைய வணிக நிறுவனங்கள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும்" எனக் குறிப்பிட்டது. 'உரிமம் பெற்ற வணிகர்கள் அனுமதிக்கப்பட்ட பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்' என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. "உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளை மீறியே பலர் ஆன்லைனில் பட்டாசுகளை விற்பனை செய்கிறார்கள். இதனால், சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் உள்பட நேரடியாக பட்டாசு விற்பனை செய்யும் பல வியாபாரிகளின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது" என்கிறார் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்ஃபாமா) தலைவர் கணேசன் பஞ்சுராஜன். "ஆன்லைன் விற்பனை என்பதால் இவர்களில் பெரும்பாலானவர்களிடம் முறையான உரிமம் இருப்பதில்லை. முறையான வேதியியல் கலவையுடன் தயாரிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட பட்டாசுகளைத்தான் இவர்கள் விற்பனை செய்கிறார்களா என்பதையும் உறுதி செய்ய முடியாது" என்கிறார் அவர். தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) அறிக்கைப்படி, 'இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் சிவகாசி ஏறக்குறைய 90% பங்களிக்கிறது. இங்குள்ள 1,070க்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற உற்பத்தி அமைப்புகள் மூலம் ஆண்டுக்கு சுமார் 7,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுகிறது. நேரடியாக சுமார் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன், பட்டாசு மற்றும் அது சார்ந்த தொழில்கள் மூலம் கிட்டத்தட்ட 5 லட்சம் குடும்பங்களுக்கு இவை ஆதரவளிக்கின்றன.' "கவர்ச்சிகரமான விளம்பரங்கள் தான் இத்தகைய ஆன்லைன் விற்பனையாளர்களின் பிரதான உத்தி. பண மோசடி ஒருபுறம் என்றால், தரமற்ற பட்டாசுகளை குழந்தைகள் கையாளும்போது அவை எதிர்பாராமல் வெடிக்கும் அபாயம், அதிலிருந்து வெளியேறும் வாயுக்கள் குழந்தைகளின் உடல்நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பது போன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளன" என்கிறார் கணேசன் பஞ்சுராஜன். பட மூலாதாரம், Getty Images "ஒழுங்குப்படுத்தப்படாத ஆன்லைன் பட்டாசு விற்பனைகளால் எங்களுக்கு விற்பனையில் 30% வரை சரிவு ஏற்படுகிறது" என்கிறார் சென்னை பெருநகர பட்டாசு விற்பனையாளர் சங்கத்தின் செயல் தலைவர் ஷேக் அப்துல்லா. "ஆன்லைனில் 85% அல்லது 90% தள்ளுபடி என விளம்பரம் செய்கிறார்கள். அதை ஆர்டர் செய்துவிட்டு சில நாட்கள் காத்திருக்க வேண்டும். வீட்டிற்கு பார்சல் வந்த பிறகு பிரித்துப் பார்த்தால்தான் அது தரமானவையா அல்லது மோசமானவையா என்பது தெரிய வரும். சில ஆன்லைன் விற்பனையாளர்கள் டெலிவரிக்கும் குறிப்பிட்ட தொகையை வசூலிக்கிறார்கள்" என்கிறார் ஷேக் அப்துல்லா. "இவையெல்லாம் புகார்களாக பதிவாகாது. சரி வாங்கிவிட்டோமே வேறு என்ன செய்வது என்றுதான் மக்கள் கடந்து செல்வார்கள். இதைத் தாண்டி பணம் செலுத்திவிட்டு, பட்டாசுகள் வீட்டிற்கே வரவில்லை எனும்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்ற உணர்வு மக்களுக்கு ஏற்படுகிறது" என்கிறார். பட மூலாதாரம், Getty Images சிவகாசியைச் சேர்ந்த ராஜ்குமார், இரண்டு பட்டாசு தொழிற்சாலைகளையும் ஒரு நேரடி பட்டாசு விற்பனை நிலையத்தையும் நடத்தி வருகிறார். "நாங்களும் ஒரு இணையதளம் வைத்துள்ளோம். ஆனால், அதில் பட்டாசுகளை விற்பனை செய்வதில்லை. என்னென்ன பட்டாசுகளை உற்பத்தி செய்கிறோம், அதன் விலை எவ்வளவு என்று மட்டுமே காட்சிப்படுத்துகிறோம். அதேபோல எங்கள் இணையதளம் மூலம் பட்டாசுகளை ஆர்டர் செய்ய முடியாது,தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அல்லது நேரடியாக அலுவலகம்/கடைக்கு வந்தே பட்டாசுகளை வாங்க முடியும்" என்றார் ராஜ்குமார். "ஒருமுறை நேரில் வந்து வாங்கி அவர்களுக்கு ஒரு திருப்தி ஏற்படும்போது, அடுத்தடுத்த ஆண்டுகளில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆர்டர் செய்கிறார்கள்" என்கிறார். பல ஆண்டுகளாகத் தங்களது குடும்பம் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடும் ராஜ்குமார், "இப்போது பல பட்டாசு உற்பத்தியாளர்கள் இணையதளம் தொடங்கி தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்துகிறார்கள். ஆனால், பிரபல பட்டாசு பிராண்டுகளின் பெயர்களில் போலி பட்டாசுகள் நிறுவனங்கள் அல்லது போலி இணையதளங்கள் உருவாக்கப்படுகின்றன. இதனால் எங்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது" என்கிறார். "எனது பட்டாசு நிறுவனத்தின் பெயரிலேயே ஒரு போலி இணையதளம் ஆன்லைனில் உள்ளது. அது குறித்து நாங்கள் புகாரும் அளித்துள்ளோம். ஆனால் அவர்கள் புதிய இணையதளங்கள், சமூக ஊடக கணக்குகள் தொடங்கி விளம்பரம் செய்கிறார்கள். இறுதியில் எங்களது சமூக ஊடக கணக்கில் மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்திய நிகழ்வுகளும் உண்டு" என்கிறார் ராஜ்குமார். பட மூலாதாரம், Getty Images "வெறுமனே கவர்ச்சிகரமான விளம்பரங்கள், மலிவு விலை பட்டாசுகள், 90 சதவீத தள்ளுபடி போன்றவற்றை நம்பாமல், முதலில் அவர் உரிமம் பெற்ற விற்பனையாளர் தானா என்பதை உறுதி செய்யுங்கள்" என்று கூறிய ராஜ்குமார், பின்வரும் விஷயங்களை பட்டியலிட்டார், 'விற்பனை செய்பவரின் கடை சிவகாசியில் எங்கிருக்கிறது என்பதை உறுதி செய்யுங்கள்'. 'அவர்களது தொலைபேசி எண்ணிற்கு அழைத்துப் பேசுகையில் உரிமம், ஜிஎஸ்டி எண் உள்பட அனைத்து விவரங்களையும் கேளுங்கள், வெறுமனே 'வாட்ஸ் ஆப்' மூலம் மட்டும் தொடர்பு கொள்ளாதீர்கள்'. 'இணையத்தில் அவர்களது கடை எங்குள்ளது, அந்த முகவரியும், அவர்களது சமூக ஊடகக் கணக்கு அல்லது இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியும் ஒன்றுதானா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இணையத்தில் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள 'ரிவ்யூஸ்' குறித்தும் பாருங்கள்'. 'அதிகளவிலான தள்ளுபடி' குறித்துப் பேசிய தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்ஃபாமா) தலைவர் கணேசன் பஞ்சுராஜன், "ஆன்லைனில் நம்பமுடியாத விலைகளில் பட்டாசுகளை கொடுக்கிறார்கள் என்றால் நிச்சயம் சந்தேகப்படுங்கள். பிரபல பட்டாசு நிறுவனங்கள் கொடுக்கும் விலைகளோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பது ஒரு தெளிவை அளிக்கும். உங்கள் வீடுகள் அருகில் இருக்கும் பட்டாசு விற்பனை நிலையங்களுக்கு நேரில் சென்று வாங்குவது இன்னும் சிறந்தது" என்கிறார். "ஒரு சிலர் செய்யும் இத்தகைய மோசடிகளால் அனைத்து சிவகாசி பட்டாசு விற்பனையாளர்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. சிவகாசி என்றாலே 'ஆன்லைனில் விற்கப்படும் தரமற்ற பட்டாசுகள்' அல்லது 'ஆன்லைன் மோசடி' என்ற பிம்பம் வந்துவிடக்கூடாது என்ற கவலை எங்களுக்கு இருக்கிறது." என்றும் அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை