பட்டினப்பாக்கத்தில் குடியிருப்புகளை இடிக்க தவெக அரசு டெண்டர் கோரியது பற்றி.. தலைமைச் செயலகம் - கோப்பிலிருந்து... சென்னை பட்டினப்பாக்கத்தில், புதிய தலைமைச் செயலகம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், அங்குள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை இடிக்க தமிழக அரசு டெண்டர் கோரியிருக்கிறது. சென்னை பட்டினப்பாக்கத்தில் சிதிலமடைந்த வீட்டு வசதி வாரியத்தின் 96 குடியிருப்புகளை இடிக்க தமிழக அரசு டெண்டர் வெளியிட்டிருக்கிறது. தமிழக அரசின் இன்றைய தேதியிட்ட டெண்டரில், பட்டினப்பாக்கத்தில் உள்ள 96 பழைய குடியிருப்புகளை இடிக்கும் பணிக்கு இ-டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கு இ-ஏல முறையில் டெண்டர் கோரும் நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்டிருக்கும் இந்த டெண்டருக்கு, டிசம்பர் 1ஆம் தேதி காலை 11 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் 25 ஏக்கரில் சட்டப்பேரவை வளாகத்துடன் புதி தலைமைச் செயலகம் அமையவிருக்கிறது. முன்னதாக, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என அரசு அறிவித்த நிலையில், அதற்கான 21.37 ஏக்கா் இடத்தை, நிலவகைப்பாடு மாற்றி சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அனுமதி அளித்திருந்தது. அதாவது, புதிய தலைமைச் செயலகம் கட்ட, பட்டினம்பாக்கம் கடற்கரைப் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியம் மற்றும் மாநகராட்சிக்குச் சொந்தமான 21.37 ஏக்கா் நிலம் தோ்வாகியுள்ளது. அந்த இடம் தற்போது பொதுப் பயன்பாடு, ஆதாரக் குடியிருப்பு மற்றும் நிறுவனப் பயன்பாடு என்ற வகைப்பாட்டுக்குள் உள்ளது. அதில் தலைமைச் செயலகம் கட்டவேண்டுமெனில் அதனை முழுமையாக வணிகப் பயன்பாட்டுக்கானதாக மாற்றவேண்டும். அதனால், மாநகராட்சியும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும் சென்னை பெருநகர வளா்ச்சிக்குழுமத்திடம் நில வகை மாற்றத்துக்காக கோப்புகளை அனுப்பிய நிலையில், அப்பகுதியின் நிலவகைப்பாடை மாற்றி சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு வந்த பிறகும், பெருநகர வளா்ச்சிக்குழுமம் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் இடத்தை நிலவகைப்பாடு மாற்றி அனுமதித்திருப்பினும், அங்கு தலைமைச் செயலகம் கட்டுவது பரிசீலனையில் மட்டுமே உள்ளதாகவும், மாற்று இடத்தை தோ்வு செய்யும் நோக்கில் அரசு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியிருந்த நிலையில், தற்போது குடியிருப்புகளை இடிப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பட்டினப்பாக்கத்தில் குடியிருப்புகளை இடிக்க டெண்டர் கோரியது தவெக அரசு!
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗