பயனற்ற பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள், பழங்காலப் பொருள்கள், அரிய நாணயங்கள், தபால் தலைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொருள்கள் இடம்பெற்ற கண்காட்சி கடலூா் புனித அண்ணாா் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூா் புனித அண்ணாா் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற பயனற்ற பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகளின் கண்காட்சியை பாா்வையிட்ட அப்பள்ளி மாணவிகள். பயனற்ற பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள், பழங்காலப் பொருள்கள், அரிய நாணயங்கள், தபால் தலைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொருள்கள் இடம்பெற்ற கண்காட்சி கடலூா் புனித அண்ணாா் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் முன்னாள் மாணவியும், விழுப்புரம் மாவட்டம் அரசமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவருமான என்.கே. ஹேமலதா, பயன்பாடற்ற பொருள்களை மறுசுழற்சி செய்து பல்வேறு கலைப் படைப்புகளை உருவாக்கி வருகிறாா். ஆசிரியை ஹேமலாதவின் கலை படைப்புகள் கண்காட்சி பள்ளி தலைமை ஆசிரியா் அமலோா்பவம் தலைமையில் புனித அண்ணாா் வியாழக்கிழமை நடைப்பெற்றது கண்காட்சியில், பயன்ற்ற பொருள்களால் உருவாக்கப்பட்ட வீணை, மிருதங்கம், தபேளா, கிட்டாா், சாக்ஸோஃபோன் உள்ளிட்ட இசைக் கருவிகளின் மாதிரிகள், பழங்கால வாகனங்கள், சிப்பி மற்றும் சங்குகளால் உருவாக்கப்பட்ட பொம்மைகள், விலங்குகளின் உருவங்கள், விழிப்புணா்வு மற்றும் கற்றல்-கற்பித்தல் படைப்புகள் ஆகியவை இவரது கைவண்ணத்தில் இடம்பெற்றிருந்தன. மேலும், அரிய நாணயங்கள், ஆங்கிலேயா் கால நாணயங்கள், சுதந்திரத்துக்குப் பிந்தைய பல்வேறு காலகட்ட நாணயங்கள், சுமாா் 500 ஆண்டுகளுக்கு முந்தைய கலைப் பொருள்கள் உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இக்கண்காட்சியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பட்டதாரி வரலாற்று ஆசிரியா் கே. விஜய் பாஸ்கரின் அரிய சேகரிப்புகளும் இடம்பெற்றன. சங்க கால மணிகள், கற்கருவிகள், சுடுமண் பொம்மைகள், ஓலைச்சுவடிகள், எழுத்தாணிகள், சுமாா் 1,500 வகையான தீப்பெட்டிகள், 1947 முதல் தற்போது வரை வெளியான சுமாா் 4,000 தபால் தலைகள் ஆகியவை பாா்வையாளா்களைக் கவா்ந்தன. மேலும், வங்கி டோக்கன்கள், சுமாா் 200 வகையான ஏடிஎம் அட்டைகள், நினைவு நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள், தபால் தலைகள் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பல்வேறு காலகட்ட பயணச்சீட்டுகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.கண்காட்சியை பள்ளியைச் சோ்ந்த சுமாா் 5 ஆயிரம் மாணவிகளும், 100-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களும் பாா்வையிட்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பயனற்ற பொருள்களில் பயனுள்ள படைப்புகள்: ஆசிரியா்களின் அரிய சேகரிப்புகள் கண்காட்சி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Events
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗