இங்கிலாந்து லீக் கோப்பைக்கான காலிறுதிக்கு முன்னேறியுள்ள 7 அணிகள் குறித்து... லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி அணி வீரர்கள் - படங்கள்: எக்ஸ் / கராபாவ் கோப்பை இங்கிலாந்தில் நடைபெறும் இஎஃப்எல் கோப்பைக்கான காலிறுதிக்கு 7 அணிகள் முன்னேறியுள்ளன. இன்னும் ஓர் அணி மீதமிருக்கிறது. கராபாவ் கோப்பை அல்லது இஎஃப்எல் (இங்கிலாந்து லீக் கோப்பை) போட்டிகளிகளுக்கான நான்காவது சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று அதிகாலை நடந்த போட்டிகளில் 2 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. லிவர்பூல் அணி - செல்ஸி அணி மோதிய போட்டி 1-1 என சமனில் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் செல்ஸி அணியின் மோர்கன் ரோஜர்ஸ் 40ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் கோல் அடிக்க, லிவர்பூலின் கோடி கேக்போ 43ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் கோல் அடித்து சமன்படுத்தினார். சமனில் முடிந்த ஆட்டத்தினால் போட்டி பெனால்டி ஹூட் அவுட்டுக்குச் சென்றது. இதில் லிவர்பூல் அணி 6-5 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. மற்றுமொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி - பிரைடன் அணிகள் மோதின. இந்தப் போட்டி 2-2 என சமனில் முடிந்தது. பெனால்டி ஹூட் அவுட்டில் சிட்டி அணி 4-3 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. நேற்று ஆர்செனல் அணியை வீழ்த்தி 66 ஆண்டுகால வரலாற்றை நிகழ்த்தியது நான்காம் தர அணியான ஃபிலீட்வுட். இந்த அணிக்கு மட்டும் இன்னும் காலிறுதிக்கான எதிரணி உறுதிசெய்யப்படவில்லை என்பதும் இந்தப் போட்டிகள் டிச.14ஆம் தேதி தொடங்கும் என்பதும் கவனிக்கத்தக்கது. இஎஃப்எல் காலிறுதிக்கான அட்டவணை மான்செஸ்டர் சிட்டி - பிராட்போர்டு சிட்டி கிறிஸ்டல் பேலஸ் - சந்தர்லேண்ட் லிவர்பூல் - பௌர்ன்மௌத் ஃபிலீட்வுட் - எவர்டன் அல்லது நியூகேசில் யுனைடெட் The #CarabaoCup Quarter-Final draw has now been confirmed. ð#EFL pic.twitter.com/9WByuvbNbI தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பெனால்டி ஷூட் அவுட்டில் வென்ற லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி..! காலிறுதிக்கு முன்னேறிய 7 அணிகள்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗