தவெக அமைச்சரவையில் பாமக இடம்பெறுமா என்பது குறித்த கேள்விக்கு பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பதில்... சௌமியா அன்புமணி - X / Sowmya Anbumani தவெக அமைச்சரவையில் பாமக இடம்பெறுமா என்பது குறித்த கேள்விக்கு பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பதில் அளித்துள்ளார். சென்னையில் நகர்புற நீடித்த வளர்ச்சிக்கான திட்டம் குறித்து நடைபெற்ற உலக நகரங்கள் நாள் நிகழ்ச்சியில் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். à®à¯à®©à¯à®©à¯à®¯à®¿à®²à¯, நà®à®°à¯à®ªà¯à®± நà¯à®à®¿à®¤à¯à®¤ வளரà¯à®à¯à®à®¿à®à¯à®à®¾à®© திà®à¯à®à®®à¯ à®à¯à®±à®¿à®¤à¯à®¤à¯ நà®à¯à®ªà¯à®±à¯à®± Second "WORLD CITIES DAY CONNECT - 2026" (à®à®²à® நà®à®°à®à¯à®à®³à¯ நாளà¯) நிà®à®´à¯à®à¯à®à®¿à®¯à®¿à®²à¯ à®à®¿à®±à®ªà¯à®ªà¯ விரà¯à®¨à¯à®¤à®¿à®©à®°à®¾à® பà®à¯à®à¯à®±à¯à®±à¯ à®à®°à¯à®¯à®¾à®±à¯à®±à®¿à®¯ பà¯à®¤à¯.!à®à®¨à¯à®¨à®¿à®à®´à¯à®à¯à®à®¿à®¯à®¿à®²à¯ மாணà¯à®ªà¯à®®à®¿à®à¯ தமிழà¯à®¨à®¾à®à¯ நà®à®°à¯à®ªà¯à®ªà¯à®± வாழà¯à®µà®¿à® à®®à¯à®®à¯à®ªà®¾à®à¯à®à¯ வாரிய à®à®®à¯à®à¯à®à®°à¯â¦ pic.twitter.com/nxMCv0q3xh இதன் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, ஏன் வீட்டில் உள்ள குழந்தைகளுக்குக்கூட பாதுகாப்பில்லை. பெண்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் தமிழகத்தில் மதுப் பழக்கம், போதைப் பழக்கம்தான். இங்கு மதுபானங்கள் சட்டரீதியாக விற்கப்படுகிறது, போதை பழக்கம் சட்டவிரோதமாக இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்றால் இந்த இரண்டையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதேபோல காவல்துறையை பலப்படுத்த வேண்டும். காலியாக உள்ள காவல்துறை இடங்களை நிரப்பி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். தமிழக அமைச்சரவையில் பாமக இடம்பெறும் சூழ்நிலை இல்லை. நீங்கள் எதிர்பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொறுப்புள்ள கட்சியாக செயல்பட்டு அரசுக்கு நல்ல ஆலோசனைகளை கொடுப்பதற்கு என்றைக்குமே தயாராக இருக்கிறது" என்றார். à®à¯à®©à¯à®©à¯à®¯à®¿à®²à¯ à®à¯à®¯à¯à®¤à®¿à®¯à®¾à®³à®°à¯à®à®³à¯ à®à®¨à¯à®¤à®¿à®¤à¯à®¤à®ªà¯à®¤à¯.! pic.twitter.com/OJIIDOLsqj தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை; இந்த இரண்டும்தான் காரணங்கள்! சௌமியா அன்புமணி
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗