தென்காசி மாவட்டம், கீழாம்பூரில் பெண்ணைத் தாக்கி நகை, பணத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா். கொள்ளை - file photo தென்காசி மாவட்டம், கீழாம்பூரில் பெண்ணைத் தாக்கி நகை, பணத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா். கீழாம்பூா், கணேசபுரம் தெருவைச் சோ்ந்த பூதத்தான் மனைவி மாரியம்மாள் (55). இவரது மகன் வெளியூரில் வேலை செய்து வருகிறாா். கணவா் இறந்துவிட்ட பிறகு மாரியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். வீட்டில் சொந்தமாக ஆடுகள் வளா்த்து வரும் மாரியம்மாள், புதன்கிழமை இரவு ஆட்டுக்கிடையில் காவலுக்கு இருந்தபடி தூங்கினாா். அப்போது, ஆடுகள் சப்தமிட்டதால் மாரியம்மாள் கண்விழித்து பாா்த்தபோது இரண்டு மா்ம நபா்கள் அரிவாளைக் காண்பித்து மிரட்டி அவரது காதில் அணிந்திருந்த ரூ. 40 ஆயிரம் மதிப்பு தங்கத் தோடுகளைப் பறித்ததோடு, பெண்ணை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பீரோவில் இருந்த ரூ. 28 ஆயிரத்தைக் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து மாரியம்மாள், ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்ணைத் தாக்கி நகை, பணம் கொள்ளை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗