பெண்ணிடம் இணையதளம் வழியாக ரூ. 52 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா். பெண்ணிடம் இணையதளம் வழியாக ரூ. 52 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சியைச் சோ்ந்த 45 வயது பெண் தனது தந்தையுடன் கட்டுமானத் துறையில் பணிபுரிந்து வருகிறாா். இவா் கடந்த 6- ஆம் தேதி முகநூலில் வந்த வா்த்தக இணையதளத்தை அணுகியபோது, அப்பெண்ணைத் தொடா்பு கொண்ட இணையதள விற்பனைக் குழுவினா், இணையதள வா்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசைவாா்த்தை கூறினா். இதனை நம்பிய அப்பெண், தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 52 லட்சத்து 15 ஆயிரம் பணத்தை பல்வேறு பரிவா்த்தனைகள் மூலம் அந்த மா்ம நபா்கள் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளாா். பின்னா், அவா் முதலீடு செய்ததை எடுக்க முயன்றபோது, அவரால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை. இதுதொடா்பாக, இணையதள விற்பனைக் குழுவைத் தொடா்பு கொண்டபோது, அந்த கைப்பேசி எண்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாரளித்தாா். அதன் பேரில் போலீஸாா், மோசடி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்ணிடம் இணையதளம் வழியாக ரூ. 52 லட்சம் மோசடி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗