ராகவா லாரன்ஸுக்கான பென்ஸ் போஸ்டர்.... பென்ஸ் திரைப்படத்திற்கான ராகவா லாரன்ஸின் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸும் வில்லனாக நிவின் பாலியும் நடித்து வருகின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் ரவி மோகனும் இணைந்துள்ளார். மேலும், எல்சியூ எனப்படும் லோகேஷ் கனகராஜ் திரைப்பட கதைகளுடன் இணைப்பை ஏற்படுத்தும் படமாகவே பென்ஸ் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு தொடங்கி ஓராண்டுக்கு மேலாகியும் இடைவெளி விட்டு எடுத்து வருவதால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸின் பிறந்த நாளை முன்னிட்டு பென்ஸ் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படத்துடன் காஞ்சனா - 4 திரைப்படத்தில் லாரன்ஸ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பென்ஸ் சிறப்பு போஸ்டர் வெளியீடு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗