பேராசிரியரும் பொருளாதார அறிஞருமான கலையரசன் புதன்கிழமை சட்டவிரோதமாக போலீசார் அழைத்துச் சென்று அலைக்கழிப்பு செய்தது குறித்து... கனிமொழி கண்டனம் - கோப்புப்படம் பேராசிரியரும் பொருளாதார அறிஞருமான கலையரசன் புதன்கிழமை சட்டவிரோதமாக போலீசார் அழைத்துச் சென்று அலைக்கழிப்பு செய்ததற்கு திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், பேராசிரியரும் பொருளாதார அறிஞருமான கலையரசன் நேற்று அதிகாலையில் பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி அராஜகமான முறையில் கைது செய்து, அலைக்கழித்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ள தவெக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்குப் பிரச்னை என இந்த அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை விமர்சிக்கும் எவர் ஒருவரும் காவல்துறையின் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற மிரட்டலாகத்தான் இந்தக் கைது சம்பவம் இருக்கிறது. அறிவுடைமையின் அருமை புரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில் கலைஞர்களும் கல்வியாளர்களும் வஞ்சிக்கப்படுவார்கள். தவெகவின் ஆட்சி அப்படியானதே! - என அவர் கூறியுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பொருளாதார நிபுணர் கலையரசன் கைது: கனிமொழி கண்டனம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗