கலையரசனை சட்டவிரோதமாக போலீசார் அழைத்துச் சென்றதற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கண்டனம் குறித்து... பொருளாதார நிபுணர் கலையரசன் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதற்கு பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். - எக்ஸ் பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான கலையரசனை சட்டவிரோதமாக போலீசார் அழைத்துச் சென்றதற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான கலையரசன் நேற்று நள்ளிரவு, விடியற்காலையில் பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி அராஜகமான முறையில் கைது செய்துள்ள தவெக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை வளர்ச்சி மைய பேராசிரியர் கலையரசன் புதன்கிழமைஅதிகாலை அவரது வீட்டில் இருந்து சீருடை இல்லாத போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நள்ளிரவு கைது, விடியற்காலை கைது என்பதெல்லாம், காவல்துறையின் ராஜ்ஜியம் நடக்கிறதோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என அவர் விமர்சித்துள்ளார். கலையரசன் சமூக வலைதளங்களில் விலைவாசி உயர்வு குறித்துப் பேசியதால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அது அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கே இல்லை; போலியான கணக்கு என்பது தெரியவந்துள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பொருளாதார நிபுணர் கலையரசன் சட்டவிரோதமாக கைது: பெ.சண்முகம் கண்டனம்