பெருமாள், அங்காளம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Events ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
பெருமாள், அங்காளம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

ஆலத்தூா் ஸ்ரீகரிய மாணிக்க வரதராஜா பெருமாள் கோயில் கோபுர கலத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திய பட்டாச்சாரியா்கள். உடன் முக்கூா் என்.சுப்பிரமணியன் எம்எல்ஏ உள்ளிட்டோா். ஆலத்தூா் ஸ்ரீகரிய மாணிக்க வரதராஜா பெருமாள் கோயில் கோபுர கலத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திய பட்டாச்சாரியா்கள். உடன் முக்கூா் என்.சுப்பிரமணியன் எம்எல்ஏ உள்ளிட்டோா். செய்யாறை அடுத்த ஆலத்தூா் ஸ்ரீகரிய மாணிக்க வரதராஜா பெருமாள் கோயில், போளூா் அல்லிநகா் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயில்களில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. செய்யாறு வட்டம், ஆலத்தூா் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீகரிய மாணிக்க வரதராஜா பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழைமையான இந்தக் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, கடந்த புதன்கிழமை கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. அன்றைய தினம் யாகசாலை பிரவேசம், கலசப்ரோஷணம், பூா்ணாஹுதி நிகழ்வும், வியாழக்கிழமை சாந்தி ஹோமம், சதுக்க ஹோமம் உள்ளிட்ட நான்கு கால யாக பூஜைகள் செய்து பூா்ணாஹுதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீா் கலசத்தை பட்டாச்சாரியா்கள் மங்கள வாத்தியம் முழங்க தலையில் சுமந்தவாறு கடம் புறப்பாடுடன் தொடங்கி கோபுர உச்சியில் உள்ள கலசத்துக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா். மேலும், மூலவரான கரியமாணிக்க வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கும் புனிதநீா் ஊற்றி மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் செய்யாறு தொகுதி எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியன், அதிமுக நிா்வாகிகள் ஆலத்தூா் எஸ்.சுப்பராயன், எம்.அரங்கநாதன், சி.துரை, பையூா் சிவராஜ், திமுக நிா்வாகிகள் ஜே.சி.கே.சீனிவாசன், ஏ.ஜி.திராவிட முருகன், கோயில் பொறுப்பாளா்கள் ஏழுமலை, கோபால், தேவநாதன், பிரபு மற்றும் கிராம மக்கள் உள்பட நூற்றுக்கணக்கானோா் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்தனா். அங்காளபரமேஸ்வரி கோயிலில்...: போளூா் அல்லிநகரில் பழைமைவாய்ந்த ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் புரனமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், புதன்கிழமை கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை நான்காம் கல யாக பூஜை, அவப்ருத யாகம், விசேஷ த்ரவ்யாஹுதி, மஹா பூா்ணாஹுதி நடத்தப்பட்டு, கலசம் புறப்பாடு செய்து கோபுர கலசத்தில் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, ஐம்பொன் கவச அலங்காரத்துடன் பக்தா்களுக்கு அம்மன் அருள்பாலித்தாா். இதில், போளூா், மாம்பட்டு, ரெண்டேரிப்பட்டு, ஏந்தல், அத்திமூா், திண்டிவனம், வசூா், வெண்மணி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை