பெரும்பான்மை இல்லை.. ஆனாலும், பிரதமராக தொடரும் நெதன்யாகு! இஸ்ரேலில் அரசியல் கேம்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
பெரும்பான்மை இல்லை.. ஆனாலும், பிரதமராக தொடரும் நெதன்யாகு! இஸ்ரேலில் அரசியல் கேம்!

டெல் அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆனால், பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், அவர்தான் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இது அந்நாட்டில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இஸ்ரேலில் அக்.27ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது வரை 86% வாக்குகள் எண்ணப்பட்டிருக்கின்றன. மொத்தம் 120 இடங்கள் இருக்கின்றன. இதில் 61 இடங்களை ஜெயிக்கும் கட்சி ஆட்சியை தக்க வைக்கும். நெதன்யாகுவின் வலதுசாரி, தீவிர வலதுசாரி மற்றும் தீவிர ஆர்த்தடாக்ஸ் கட்சிகளின் கூட்டணி 53 இடங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இது ஆட்சியமைக்க பத்தாது. மறுபுறம், எதிர்க்கட்சிகள் 48 இடங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கின்றன. இதில் அரபு இஸ்ரேலியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் 19 இடங்களை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்படியெனில் இந்த கட்சியை யாருக்கு ஆதரவளிக்கிறதோ அவர்கள் தான் ஆட்சியை கைப்பற்றுவார்கள். சுருக்கமாக சொல்வதெனில்.. யூத நாட்டில் அரபு கட்சிகள்தான் கிங் மேக்கர். நிலைமை இப்படி இருக்கும்போது, இந்த தேர்தல் நெதன்யாகுவுக்கு பெரும்பான்மையை வழங்காவிட்டாலும்.. இந்த தேர்தல் அவருடைய அரசியல் கவுரவத்தை மீட்டெடுத்துள்ளதாக அந்நாட்டு அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நடந்த ஹமாஸ் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த விமர்சனங்கள் இருந்த போதும்.. இஸ்ரேலிய யூதர்களின் கணிசமாக ஆதரவை இவர் பெற்றிருக்கிறார். இவருக்கு பெரும்பான்மை இல்லை என்றாலும், எதிர்க்கட்சியை முந்தும் அளவுக்கு ஓட்டு கிடைத்திருக்கிறது. எனவே, இவர் தோற்காமல் இன்னும் களத்தில்தான் இருக்கிறார் என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்பது பிரச்சனை எனில், மறுபுறம் அரபு கட்சிகளின் ஆதரவை எதிர்க்கட்சிகள் பெற மறுக்கின்றன. எனவே, நெதன்யாகுவை காலி செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எனவே நெதன்யாகு தொடர்ந்து பதவியில் நீடிக்க 2 வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று, நெதன்யாகு தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி வைக்க வேண்டும். டிரம்பும் அதைதான் விரும்புகிறார். இந்த கூட்டணி சாத்தியமானால், அமைச்சரவையில் நெதன்யாகுவின் ஆதரவாளர்களான தீவிர வலதுசாரிகளை ஓரம் கட்ட முடியும். அப்படியெனில், இனி அமெரிக்காவை கேட்காமல் இஸ்ரேல் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காது. இரண்டாவது வழி, யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்று சொல்லி மறு தேர்தலை நடத்துவது. மறு தேர்தல் நடக்கும் வரை தற்காலிக பிரதமர் நான்தான் என நெதன்யாகு முன்னாடி வருவார். மீண்டும் தேர்தல் நடந்தாலும் நெதன்யாகுவின் செல்வாக்குதான் கோலோச்சும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். தேர்தலுக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில், நெதன்யாகு பேசுகையில்.. ஈரானின் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான வரலாற்று வாய்ப்பு இது என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை