பிஎம்-கிசான் திட்டத்தின் 24-வது தவணையை விடுவித்தார் பிரதமர் மோடி!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
பிஎம்-கிசான் திட்டத்தின் 24-வது தவணையை விடுவித்தார் பிரதமர் மோடி!

பிஎம்-கிசான் திட்டத்தின் 24-வது தவணை விடுவிக்கப்பட்டது தொடர்பாக.. குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் பிஎம்-கிசான் திட்டத்தின் 24-வது தவணையாக 9.34 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 18,690 கோடி நிதியைப் பிரதமர் மோடி விடுவித்தார். அகமதாபாத் - வாரணாசி விரைவு ரயில் மற்றும் மெஹ்சானா - பெச்சராஜி - சபர்தி ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி கொடியசைத்துத் துவங்கிவைத்தார். குஜராத்தின் பனஸ்கந்தாவிலிருந்து பிரதமர் விடுவித்த தவணைத் தொகையின் ஒரு பகுதியாக, ஒடிசாவிலுள்ள பயனாளிகளுக்கு ரூ. 3,000 கோடி வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிஎம்-கிசான் திட்டம், கோடிக்கணக்கான சிறு விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, புவனேஸ்வரிலிருந்து காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, மாநில அளவிலான 'பிஎம்-கிசான் உற்சவ நிகழ்வில் பயனாளிகளான விவசாயிகளிடையே உரையாற்றினார். இது குறித்து அவருடைய எக்ஸ் தளப் பதிவில், விவசாயிகளின் நலனும் மேம்பாடும் எங்கள் அரசின் முதன்மையான கடமையாகும். இன்று, பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் பனஸ்கந்தாவிலிருந்து காணொலி வாயிலாக, நாடு தழுவிய பிஎம்-கிசான் திட்டத்தின் 24-வது தவணையை விடுவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ், நேரடிப் பணப் பரிமாற்ற முறை மூலம் மாநிலத்திலுள்ள 35.38 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நிதி உதவி நேரடியாகச் சென்றடைந்தது. எங்களைப் பொறுத்தவரை, விவசாயி என்பவர் வெறும் பயிரிடுபவர் மட்டுமல்ல. அவர் நமக்கு உணவு வழங்குபவர். மத்திய அரசின் பிஎம்-கிசான் திட்டம், மாநில அரசின் சிஎம்-கிசான் திட்டம், குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,100 என்ற விலையில் நெல் கொள்முதல், சுபத்ரா யோஜனா, கிருஷி வித்யாநிதி கல்வி உதவித்தொகை மற்றும் பிஎம் தன்-தான்ய கிருஷி யோஜனா போன்ற முன்னெடுப்புகள், இன்று நமது கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளன. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை