பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜேசனுடன் சண்டையிடுவது ஏன் என்பது குறித்து ஷமா விளக்கம் அளித்துள்ளது தொடர்பாக... பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிரபலங்கள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், இம்முறை முதல்முறையாக காமன்மேன் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்கள் பிக் பாஸ் போட்டியாளர்களாக அனுமதிக்கப்பட்டனர். பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜேசன், முனியம்மா, ஷமா, மணிவண்ணன், கரீஷ்மா ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்றனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து மணிவண்ணன் வெளியேறிவிட்டார். கடந்த வாரத்துடன் ஷமாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது ஜேசன், முனியம்மா, கரீஷ்மா ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர். பிரபலங்களுக்கே சவால் விடும் வகையில் காமன்மேன் பிரதிநிதிகளின் ஆட்டம் இருந்து வருகிறது. இதற்கு அங்கீகாரமாக, சிறந்த போட்டியாளருக்கு கொடுக்கப்படும் எவிக்ஷன் ஃபிரீ டிக்கெட் ஷமா, ஜேசன் ஆகியோருக்கு மட்டுமே கிடைத்தது. மூன்றாவது எவிக்ஷன் ஃபிரீ டிக்கெட் டிடிஎஃப் வாசனுக்கு கிடைத்தது. இந்நிலையில் காமன்மேன் போட்டியாளரான ஜேசனுடன் அடிக்கடி முரண்கள் வருவது ஏன் என்பது குறித்து ஷமா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தினமணி இணையதளத்துக்கு ஷமா அளித்த சிறப்பு நேர்காணலில் அவர் பேசியதாவது: ''பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் ஜேசன் மிகவும் முக்கியமான நபர். பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களிடம் பேசி, அவனுடைய சிந்தனையை மற்றவர்களிடம் திணிப்பதை இயல்பாகவே செய்வான். போட்டியாளர்களும் அவனின் சிந்தனை வலையில் விழுவார்கள். ஆனால், நான் அதனை களைத்துவிடுவேன். அதனால் என்னைக் கண்டாலே டென்ஷன் ஆவான். அவன் ஆடும் மூளைச்சலவை ஆட்டத்தில் நான் எப்போதுமே சிக்கமாட்டேன். அதனால் ஜேசனுக்கும் எனக்கும் என்றுமே முரண் இருந்துகொண்டே இருக்கிறது'' எனக் குறிப்பிட்டார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பிக் பாஸ் 10: ஜேசனுடன் அடிக்கடி சண்டை வருவது ஏன்? ஷமா விளக்கம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗