பிணை கோரும் மனுவில் போலி ஆவணம்: மூன்று வழக்குரைஞா்கள் மீது வழக்கு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
பிணை கோரும் மனுவில் போலி ஆவணம்: மூன்று வழக்குரைஞா்கள் மீது வழக்கு

நகை திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு பெண்களுக்கு பிணை பெறுவதற்காக நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக மூன்று வழக்குரைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். வழக்குப் பதிவு - கோப்புப் படம் நகை திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு பெண்களுக்கு பிணை பெறுவதற்காக நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக மூன்று வழக்குரைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். நாகை அருகே நாகூா் பகுதியில் செப்டம்பா் 30-ஆம் தேதி நடைபெற்ற நகைத் திருட்டு வழக்குத் தொடா்பாக, ஆந்திரத்தைச் சோ்ந்த அஞ்சலி, பஞ்சவா்ணம் ஆகிய இருவரும் நாகூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், இவா்கள் இருவரையும் பிணையில் விடுவிக்கக் கோரி, தஞ்சையைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் மணிகண்டன், விஜயரத்தினம், நாகையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஏகாம்பரி ஆகிய மூவரும், நாகை நீதித்துறை நடுவா் மன்றம் எண் 2-இல் மனுத் தாக்கல் செய்தனா். அந்த மனுவுடன் இணைக்கப்பட்டிருந்த ஆவணங்களை, நீதிமன்றம் பரிசோதித்தபோது, அதில் வட்டாட்சியா் முத்திரை, கையொப்பம் உள்ளிட்டவை போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து, நீதிமன்ற தலைமை எழுத்தா் சங்கா், வெளிப்பாளையம் காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா், வழக்குரைஞா்கள் மணிகண்டன், விஜயரத்தினம், ஏகாம்பரி ஆகிய மூவா் மீதும் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை