தமிழ் இசைக்கலைஞர் சதா மறைவு குறித்து... தமிழ் சினிமாவின் பிரபலமான இசைக்கலைஞர் சதா உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ்த் திரையிசையில் இசைஞானி இளையராஜா குழுவில் இருந்த புகழ்பெற்ற முன்னணி கிதார் கலைஞரான எஸ். சதானந்தம் (சதா) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இளையராஜாவின் வழிகாட்டுதலில் நீண்ட காலம் பணியாற்றியவர் என்பதால் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இவரது கிதார் இசையால் பங்களிப்பு செய்துள்ளார். மௌன ராகம் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக், ரேவதியை சந்திக்க காவல்துறையிடமிருந்து தப்பித்து வரும் காட்சியின் பின்னணி இசையை வாசித்தவர் சதா. இளையராஜாவுடன் சதா. - கானா பிரபா/ பேஸ்புக் இளையராஜாவுக்கு அருகே அமர்ந்து இசைக்குறிப்புகளை எழுதக்கூடிய அளவுக்கு அக்குழுவில் முக்கியமானவரான சதா அன்னக்கிளி திரைப்படத்திலிருந்து கடந்த 50 ஆண்டுகளாக இளையராஜாவுடன் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது இசைக் கச்சேரிகளிலும் தொடர்ந்து கிதார் இசையை வாசித்து வந்த சதா மாஸ்டர் காலமான செய்தி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரபல கிதார் இசைக்கலைஞர் சதா காலமானார்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗