பிரதமர் மோடி நாளை குஜராத் செல்வது குறித்து... பிரதமர் மோடி - கோப்புப் படம் பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக். 29) குஜராத் மாநிலத்துக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை காலை அரசு முறைப் பயணமாக குஜராத் மாநிலத்துக்குச் செல்லும் நிலையில், அங்கு பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார். இதையடுத்து, வரும் அக். 31 ஆம் தேதி வரையிலான பிரதமர் மோடியின் 2 நாள் குஜராத் பயணத்தில் அவர் ரூ. 14,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைப்பதுடன், பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு 24 ஆவது தவணையாக ரூ. 19,000 கோடியை விடுவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில், சர்தார் வல்லபபாய் படேலின் 151 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வரும் அக். 31 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, நர்மதா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய சிலையான படேலின் சிலைக்கு மலர் மரியாதைச் செலுத்துவார் எனக் கூறப்பட்டுள்ளது. இத்துடன், அகமதாபாத் நகரத்தில், 6 கி.மீ. மற்றும் 3.3 கி.மீ. நீளத்தில் அமைக்கப்படவுள்ள இரண்டு வெவ்வேறு மெட்ரோ ரயிலின் அடுத்த கட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடந்த செப்டம்பர் மாதம் குஜராத் சென்றிருந்த பிரதமர் மோடி அங்கு ரூ.35,000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதமர் மோடி நாளை குஜராத் பயணம்! ரூ.14,000 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗