பிரிட்டனின் உயர்தர பள்ளிகள், லாபம் ஈட்டுவதற்காக இந்தியாவை நோக்கி வருகின்றனவா?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
பிரிட்டனின் உயர்தர பள்ளிகள், லாபம் ஈட்டுவதற்காக இந்தியாவை நோக்கி வருகின்றனவா?

பட மூலாதாரம், Harrow School, Bengaluru இந்தியாவின் வடமேற்கு மாநிலமான பஞ்சாபில், சண்டிகர் நகரின் புறநகர்ப் பகுதியில், 473 ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் பொதுப் பள்ளி ஒன்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது முதல் சர்வதேச வளாகத்தைத் தொடங்கியுள்ளது. இந்த வளாகத்தில் பெண் குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர். பிரிட்டனின் பெட்ஃபோர்ட்ஷையரில் உள்ள பள்ளி வளாகத்தின் மையத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோதிக் பாணி கட்டடத்துக்கு மாறாக, இந்தியாவில் உள்ள வளாகம் நவீனமானதாகவும், கல்விக்காகத் தனியாக வடிவமைக்கப்பட்ட கட்டடங்களைக் கொண்டதாகவும் உள்ளது. இருப்பினும், கண்ணைக் கவரும் சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்ட கடிகார கோபுரம், பள்ளியின் பிரிட்டிஷ் பாரம்பரியத்தைப் பறைசாற்றுகிறது. மொஹாலியில் உள்ள பெட்ஃபோர்டு பள்ளி, இந்தியாவில் கிளைகளைத் தொடங்கியுள்ள குறைந்தது ஆறு பிரிட்டிஷ் பொதுப் பள்ளிகளில் ஒன்றாகும். நீண்ட வரலாற்றைக் கொண்ட, வசதிபடைத்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிகக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தனியார் பள்ளிகளே பிரிட்டிஷ் பொதுப் பள்ளிகள் எனப்படுகின்றன. இந்தியாவில் உள்ள மிகப் பழமையான மூன்று பள்ளிகளும் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றன. சீனாவில் சந்தை நிலவரங்கள் கடுமையடைந்து இருப்பதற்கும், பிரிட்டனில் 2025 ஜனவரி 1 முதல் தனியார் பள்ளிக் கட்டணங்களுக்கு மதிப்புக் கூட்டு வரி (VAT) அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதற்கும் இடையே இந்த விரிவாக்கம் நடைபெறுகிறது. பட மூலாதாரம், Bedford School, Mohali இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றும், மென்பொருள் மற்றும் புத்தாக்க நிறுவனங்களின் மையம் என்றும் அழைக்கப்படும் பெங்களூருவில், 2023 முதல் புகழ்பெற்ற ஹாரோ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு படித்த பள்ளி இதுவாகும். மத்திய இந்தியாவின் போபாலில் ஷ்ரூஸ்பரி பள்ளி வளாகம் அமைந்துள்ளது. அதேவேளையில், நன்கு மதிக்கப்படும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைக் கொண்டிருப்பதால், 'கிழக்கின் ஆக்ஸ்போர்டு' என்று அழைக்கப்படும் மேற்கு இந்திய நகரமான புனேவில் வெலிங்டன் கல்லூரி தனது வளாகத்தை அமைக்கத் தேர்வு செய்துள்ளது. மில்ஃபீல்டு, குயின் எலிசபெத் பள்ளி உள்ளிட்ட மேலும் சில பள்ளிகள், வரும் ஆண்டுகளில் தங்களின் கிளை வளாகங்களைத் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. பல ஆண்டு காலங்களாக, காலனித்துவ கால பிரிட்டிஷ் பொதுப் பள்ளி முறையைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட, நன்கு நிறுவப்பட்ட உள்ளூர் உண்டு உறைவிடப் பள்ளிகள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. உயர்குடியினர் மற்றும் பிரபுத்துவக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இவை கல்வி வழங்கி வந்தன. ஆனால், புதிதாகச் செல்வந்தர்களாகியுள்ள இந்தியக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு உலகளாவிய அனுபவத்தை வழங்க அதிகளவில் விரும்புவதால், இந்தச் சந்தை வேகமாக விரிவடைந்துள்ளது. "எங்களுடைய சர்வதேசப் பாடத்திட்டம், பல குடும்பங்கள் எங்கள் பள்ளியைத் தேர்வு செய்வதற்கான முக்கியக் காரணமாக உள்ளது" என்று பெங்களூருவில் உள்ள ஹாரோ பள்ளியின் தலைமைப் பொறுப்பாளர் கரோலின் பாஸ்கோ பிபிசியிடம் தெரிவித்தார். End of அதிகம் படிக்கப்பட்டது உலகெங்கிலும் உள்ள 10,000 பள்ளிகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உலகளாவிய கல்வி கட்டமைப்பான கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தை, தொடக்கப் பள்ளி முதல் ஏ-லெவல் வரை முழுமையாகப் பின்பற்றும் இந்தியாவின் ஒரு சில பள்ளிகளில் ஹாரோ மற்றும் பெட்ஃபோர்டும் அடங்கும். பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு இந்தியா முழுவதும் பல பள்ளிகளை நடத்திவரும் குடும்பத்தைச் சேர்ந்த ஹர்சிம்ரன் சிங் கொச்சார், தனது ஐந்து வயது மகள் பரினீத்தை பெட்ஃபோர்டு மொஹாலி பள்ளியில் சேர்க்க முடிவு செய்ததற்கான காரணத்தை விளக்கினார். "கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தாமல், மாணவர்களின் குணநலன் வளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கைக்கு முழுமையான முக்கியத்துவம் அளிப்பதே இந்தப் பள்ளியின் சிறப்பம்சம்" என்றார். பல இந்தியப் பள்ளிகளில் இருப்பதைப் போல, இந்தப் பள்ளியில் 'விஐபி கலாசாரம்' இல்லாததும் தன்னைக் கவர்ந்ததாக அவர் கூறினார். மேலும், "அனைத்துக் குழந்தைகளும் ஒரே மாதிரியாக நடத்தப்படுகிறார்கள். அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு அதிகச் சலுகைகள் வழங்கப்படுவதில்லை" என்று சிங் தெரிவித்தார். உள்நாட்டில் செல்வச் செழிப்புடன் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், நீண்டகாலம் வெளிநாடுகளில் வசித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பிய வெளிநாடு வாழ் இந்தியர்களும், தங்கள் குழந்தைகள் இந்திய வேர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என விரும்பும் பிரிட்டன் அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் இன்னும் வசிக்கும் இந்தியர்களும் இந்தப் பள்ளிகளுக்கு முக்கியமான சந்தையாக உள்ளனர் என்று பாஸ்கோ கூறுகிறார். பெங்களூருவில் உள்ள ஹாரோ பள்ளியின் ஊழியர்களில் 60 சதவீதம் பேர் சர்வதேசப் பின்னணியைக் கொண்டவர்கள். மற்ற பள்ளிகளைப் போலவே, இந்தப் பள்ளியும் தனது தனித்துவமான மரபுகளைப் பெங்களூரு வளாகத்துக்குக் கொண்டுவந்துள்ளது. ஆசிரியர்கள் 'பீக்ஸ்' என்று அழைக்கப்படுகின்றனர். மாணவர்கள் பாரம்பரிய ஹாரோ தொப்பிகள் மற்றும் சீருடைகளை அணிகின்றனர். மேலும், உலகம் முழுவதும் உள்ள அதன் பள்ளிகளில் நடைபெறும் குறுக்குவழி ஓட்டப் போட்டியான 'தி லாங் டக்கர்' போட்டியிலும் பங்கேற்கின்றனர். பாரம்பரிய பிரிட்டிஷ் கல்வியின் அடையாளமாகக் கருதப்படும் 'ஹவுஸ்' முறையும் இங்கு உள்ளது. பிரிட்டிஷ் பள்ளிகளுக்கே உரிய இந்தப் பாரம்பரிய நடைமுறைகள், தினமும் காலையில் இந்திய தேசிய கீதம் பாடுவது, முக்கிய இந்துப் பண்டிகையான விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவது போன்ற உள்ளூர் மரபுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம், Harrow School, Bengaluru இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதார வலிமையும், புதிதாகக் கோடீஸ்வரர்களாக உருவாகியுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் இந்தப் பள்ளிகளின் விரிவாக்கத்துக்கு இயல்பான ஆதரவாக இருந்தாலும், இந்த வளர்ச்சிக்கு ஓரளவு சீனாவில் ஏற்பட்டுள்ள மந்தநிலையும் காரணமாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் வெளிநாடுகளில் பிரிட்டிஷ் பொதுப் பள்ளிகள் விரிவடைந்ததற்கு சீனாவும் ஹாங்காங்கும் முக்கியக் காரணமாக இருந்தன. பிரிட்டனில் உள்ள 50 பள்ளிகள் நடத்தும் 151 கிளை வளாகங்களில் பாதி, இந்த இரு பகுதிகளிலும் அமைந்துள்ளன. ஆனால், விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் "தேசிய அரசாங்கங்களின் அதிகரித்த கண்காணிப்பு, சில சந்தர்ப்பங்களில் ஏற்படும் எதிர்ப்பின்" காரணமாக இந்த வளர்ச்சி மந்தமடைந்துள்ளது என்று பிரிட்டனைச் சேர்ந்த தனியார் கல்விக் கொள்கை மன்றத்தின் (PEPF) 2025-ஆம் ஆண்டு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2024ஆம் ஆண்டில் சீனா கொண்டு வந்த புதிய சட்டம், அனைத்துப் பாடங்களிலும் தேசப்பற்று சார்ந்த கல்வியை ஒருங்கிணைக்க வேண்டும் எனப் பள்ளிகளைக் கட்டாயப்படுத்தியது. இது விரிவாக்கத்துக்குக் கூடுதல் சவாலாக அமைந்ததுடன், திட்டமிடப்பட்டிருந்த சில பள்ளி வளாகங்கள் ரத்து செய்யப்படவும் வழிவகுத்தது. இதனால், இந்தியா மற்றும் வியட்நாம் போன்ற பிற நாடுகளை இந்தப் பள்ளிகள் பரிசீலிக்கத் தொடங்கின என்று பிஈபிஎப்ஃ தெரிவித்துள்ளது. மேலும், பிரிட்டன் 2024 இலையுதிர்கால பட்ஜெட்டில் தனியார் பள்ளிக் கட்டணங்களுக்கு 20 சதவீத மதிப்புக் கூட்டு வரியை (VAT) அறிமுகப்படுத்தியது. இதனால் பல தனியார் பள்ளிகள் வெளிநாடுகளில் விரிவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பெட்ஃபோர்டு பள்ளி மொஹாலியின் நிறுவன முதல்வர் நவோமி அட்கின்ஸ் கூறுகிறார். "அவை மிகவும் நெருக்கடியான சூழலில் உள்ளன. முன்பு சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிடாத பள்ளிகள்கூட இப்போது திடீரென இந்தியாவில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளன" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். பட மூலாதாரம், Harrow School, Bengaluru இருப்பினும், இந்தியச் சந்தை எளிதானதாக இருக்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். இந்தப் பள்ளிகளில் பெரும்பாலானவை உள்ளூர் முதலீட்டாளர்கள் அல்லது நிறுவனங்களுடன் இணைந்து தொடங்கப்படுகின்றன. மற்ற நாடுகளில் உள்ள பள்ளிகள் முன்பு தங்களது வருவாயில் 10 சதவீதத்தை உள்ளூர் கூட்டாளி அல்லது முதலீட்டாளருக்குச் செலுத்தும் வகையில் ஒப்பந்தங்களைச் செய்திருக்கலாம். ஆனால், இந்தியாவில் சில சந்தர்ப்பங்களில் லாப வரம்பு வெறும் 1 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அட்கின்ஸ் கூறுகிறார். சந்தையின் அளவு குறித்த மதிப்பீடுகளும் சில இடங்களில் மிகையாக இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். இந்தியாவில் பள்ளிகளில் சேர்ந்து பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 25 கோடியாக இருந்தாலும், ஆங்கிலக் கல்வி நாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளது. மேலும், சீனா, கொரியா அல்லது வியட்நாம் போன்ற ஆங்கிலம் பேசாத நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் உள்ளூர் கல்வி நிறுவனங்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவின் தனிநபர் வருமானமும் மிகவும் குறைவாக உள்ளது. பிரிட்டிஷ் பள்ளிகளில் முழுமையான உண்டு உறைவிடக் கல்விக்காக 15,000 பவுண்டுகள் அல்லது அதற்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்பதால், இந்த அதிகக் கட்டணங்கள் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தக்கூடும். "நான் இந்தோனேசியா, மலேசியா மற்றும் சீனாவில் பணியாற்றியுள்ளேன். ஆனால், இந்தியர்கள் விலையைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள்; அவர்கள் குறைந்த விலையில் கிடைக்கும் நல்ல சலுகைகளை விரும்புகிறார்கள்" என்று அட்கின்ஸ் கூறுகிறார். இதனால்தான், மற்ற பிரிட்டிஷ் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத்தில் சுமார் பாதியளவையே பெட்ஃபோர்டு மொஹாலி பள்ளி நிர்ணயித்துள்ளது. 2011-12 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில், பிரிட்டிஷ் பள்ளிகளின் வெளிநாட்டுக் கிளை வளாகங்கள் 152.4 மில்லியன் பவுண்டுகள் லாபம் ஈட்டியுள்ளதாக பிஈபிஎப்ஃ தெரிவித்துள்ளது. இந்த லாபம் பல ஆண்டுகளாகக் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இந்த வளர்ச்சி அபரிமிதமாக இல்லாமல், மெதுவாகவும் சீராகவும் இருக்கும் என்று தெரிகிறது. இந்தியாவின் பழைய காலனித்துவத் தொடர்புகளும், புதிதாக உருவாகியுள்ள செல்வந்தர்களும் இந்தப் பாரம்பரியக் கல்வி நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க வணிக வாய்ப்பை வழங்குகின்றனர். இருப்பினும், குறைந்தபட்சம் உடனடியாகவாவது சீனச் சந்தையில் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்யும் அளவுக்கு இந்த வாய்ப்பு பெரிதாக இருக்காது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை