போலீஸாரை தகாத வார்த்தைகளால் பேசியதாக வழக்கு: சேகர்பாபுவிடம் 2.30 மணி நேரம் விசாரணை

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
போலீஸாரை தகாத வார்த்தைகளால் பேசியதாக வழக்கு: சேகர்பாபுவிடம் 2.30 மணி நேரம் விசாரணை

சென்னை: போலீஸாரை தகாத வார்த்தைகளால் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிடம் 2.30 மணி நேரம் விசா ரணை நடத்தப்பட்டது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி மோசடி வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, விசாரணைக்காக அவரை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தபோது, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, காவல் ஆணையர் அலுவலக நுழைவுவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோலீஸாரு டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், சேகர்பாபு, திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் மீது வேப்பேரி போலீஸார் வழக்குப்பதிந்தனர். இதன் தொடர்ச்சியாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு சேகர் பாபுவுக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர். அதன்படி, நேற்று காலை 10.30 மணியளவில் வேப்பேரி காவல் நிலையத்தில் சேகர்பாபு ஆஜரானார். அவரிடம் உதவி ஆணையர் முன்னிலையில் போலீஸார் சுமார் 2.30 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து வெளியே வந்த சேகர்பாபு, செய்தியாளர் களிடம் கூறியதாவது: காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளரின் அணுகுமுறை சரியில்லாததால் பெரிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, காவல் துறையினர் என் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். அதனை ஏற்று விசார ணைக்கு ஆஜராகியுள்ளேன். மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வந்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். காவல்துறையினர் நேர்மையாக விசாரணை நடத்தினர். துன்புறுத்தவில்லை. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களைத் திசைதிருப்பும் நோக்கத்தில்தான் இதுபோன்ற வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை