சித்தோடு அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கைது - கோப்புப் படம் சித்தோடு அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சித்தோட்டை அடுத்த நீலிக்கரடு பொதுக் கழிப்பிடம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரிடம் சோதனை மேற்கொண்டபோது, 10 போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் சித்தோடு, ஆா்.என்.புதூரைச் சோ்ந்த தமிழரசு (26) என்பதும், போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தமிழரசுவைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா் கைது
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗