‘போதையில் புதையும் சக்தியாக தமிழகத்தை மாற்றி வருவதுதான் மிச்சம்’ -டிடிவி தினகரன் கண்டனம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
‘போதையில் புதையும் சக்தியாக தமிழகத்தை மாற்றி வருவதுதான் மிச்சம்’ -டிடிவி தினகரன் கண்டனம்

‘போதையில் புதையும் சக்தியாக தமிழகத்தை மாற்றி வருவதுதான் மிச்சம்’ என்று டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளதைப் பற்றி... டிடிவி தினகரன் - முதல்வர் விஜய் - (கோப்புப்படம்) ‘போதையில் புதையும் சக்தியாக தமிழகத்தை மாற்றி வருவதுதான் மிச்சம்’ என்று டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொடரும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளைக் கண்டித்து அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “தருமபுரி அருகே கஞ்சா போதையில் பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த மகன் – போதையில்லாத் தமிழகத்தை உருவாக்கப்போவதாகக் கூறிய 'தூய சக்தி', தமிழகத்தை "போதையில் புதையும்" சக்தியாக மாற்றி வருவதுதான் மிச்சம்! தருமபுரியில் செலவுக்குப் பணம் தர மறுத்ததால், கஞ்சா போதையில் பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை மட்டுமல்லாமல், சமூகத்தின் அமைதியையும் சட்டம் ஒழுங்கையும் அடியோடு சீர்குலைத்து வருவதோடு போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள் பணத்திற்காகக் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, தாக்குதல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபடுவதும் வாடிக்கையாகிவருகிறது. பெற்ற தாயின் உயிரையே பறிக்கும் அளவிற்கு போதை வெறி தலைக்கேறியிருப்பது, தமிழகத்தில் போதைப் பொருள் ஒழிப்பிலும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் அரசு எந்த அளவிற்கு தோல்வியடைந்திருக்கிறது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழகத்தின் தலைநகரம் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை ஆழமாக வேரூன்றியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த, மாவட்டந்தோறும் போதைப் பொருள் தடுப்புப் படை அமைப்பதற்குத் தனது முதல் மூன்று கையெழுத்துகளில் ஒன்றாகக் கையெழுத்திட்டதாகப் பெருமை பேசிக்கொண்ட தூய சக்தி, இன்று கஞ்சா போதையால் நிகழ்ந்திருக்கும் இந்தப் படுகொலைக்கு என்ன பதில் சொல்லப் போகிறது? நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்களும், அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வரும் சூழலில், இத்தகைய குற்றங்களைத் தடுக்க அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எந்த மூலையில் முடங்கிக் கிடக்கிறது? மாவட்டந்தோறும் போதைப் பொருள் தடுப்புப் படை அமைத்ததாகக் கூறிய தூயசக்தி, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் மொத்த விற்பனையாளர்களையும், கடத்தல் பின்னணியில் செயல்படுவோரையும் தனது கட்சியிலேயே வைத்துக்கொண்டு, ஒருபுறம் போதை ஒழிப்பு குறித்து மேடைகளில் பேசுவதும், மறுபுறம் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் போதைப் பொருள்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறுவதும்தான் அவ்வப்போது பெருமையாகக் கூறிக்கொள்ளும் 'வெள்ளாவியில் வைத்துத் துவைக்கப்பட்ட தூய சக்தியின்' உண்மையான செயல்பாடா? ஆட்சிப் பொறுப்பேற்று 5 மாதங்களைக் கடந்த பின்னரும், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோரையும், அவர்களுக்குப் பின்னணியில் இருந்து செயல்படும் முக்கியப் புள்ளிகளையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்காமல், அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கே கட்சியில் பொறுப்புகளை வழங்கி அழகுபார்ப்பதன் விளைவாகவே போதைப் பொருட்களின் புழக்கமும், அதனால் ஏற்படும் குற்றச் சம்பவங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்? போதைப்பொருள் புழக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தி, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையை, அரசின் தவறான செயல்பாடுகளையும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதையும் சுட்டிக்காட்டி, அதன் போலி முகத்திரையை ஜனநாயக ரீதியில் கிழித்தெறிந்து வருபவர்களைக் கண்காணிக்கவும், அவர்களை அச்சுறுத்தவும் ஏவல்துறையாகப் பயன்படுத்தி வரும் தூய சக்தி, தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, காவல்துறையை எவ்வித அரசியல் தலையீடுமின்றி போதைப்பொருள் ஒழிப்புப் பணியில் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திருந்தால், கடந்த ஐந்து மாதங்களில் தமிழகத்தில் இத்தனை குற்றச் சம்பவங்கள் அரங்கேறியிருக்க வாய்ப்பில்லை! பல கோடி ரூபாய் செலவு செய்து ரீல்ஸ் கண்டெண்டுகளுக்காக மாரத்தான் ஓடுவதால் மட்டும் போதைப் பொருட்களை ஒழித்துவிட முடியாது என்பதை உணர்ந்து, நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களின் வாழ்க்கையைப் படுகுழியில் தள்ளிக்கொண்டிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் தாராளப் புழக்கத்தை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தி ஒழிப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். "All that is being achieved is the transformation of Tamil Nadu into a place sinking into a quagmire of intoxication," TTV Dhinakaran has remarked, expressing his condemnation. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை