காவல்துறையை மிரட்டிய வழக்கில் சேகர்பாபு நேரில் ஆஜரானது குறித்து... திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு - கோப்புப் படம் சென்னையில் காவல்துறையினரை மிரட்டியதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ரூ. 100 கோடி மோசடி செய்ததாக திமுக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அன்பில் மகேஸ் கைது நடவடிக்கையின்போது காவல்துறைக்கும் திமுக முன்னாள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், வாக்குவாதத்தில் காவல்துறையினரை மிரட்டும் வகையில் சேகர்பாபு பேசியதாக அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், விசாரணைக்கு ஆஜராகுமாறு சேகர்பாபுவுக்கு சென்னை வேப்பேரி காவல்துறையினர் அழைப்பாணை விடுத்தனர். அழைப்பாணை விடுக்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இன்று (அக். 30) நேரில் ஆஜரானார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறைக்கு மிரட்டல்: சேகர்பாபு நேரில் ஆஜர்!