பொன்னும் பொருளும் அருளும் அம்மன்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
பொன்னும் பொருளும் அருளும் அம்மன்

பாண்டவர்களின் பொக்கிஷம் மறைந்த புனித மலை.. கெளரவர்களோடு சூதாட்டம் ஆடி அனைத்தையும் இழந்த பாண்டவர்கள் வனவாசமாக காடு மேடுகள் எல்லாம் அலைந்து திரிந்தனர். அந்த வேளையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான கஜானாபாறைக்கும் வந்தனர். திரும்பிய பக்கம் எல்லாம் இயற்கை அன்னை அள்ளிக் கொடுத்த வசீகரம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை போர்த்திய வனப்பகுதியான இங்கு பணப்பயிர்களான ஏலக்காய், தேயிலை, மிளகு ஆகியவை ஆண்டு முழுவதும் செழித்து வளர்ந்து செல்வச் செழிப்பைஹ அள்ளித் தருகிறது. இத்தகைய செழிப்பான இடத்துக்கு பூர்வகாலத்தில் பொட்டங்காடு என்ற பெயர் இருந்து வந்தது. இந்த மலைப் பகுதியில் அரண்மனையும், தோட்டங்களும் போடிநாயக்கனூர் அரண்மனை ஜமீனுக்கு உரிமையானதாக இருந்தது. இங்குக் காண்பவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாக மிகப் பெரிய செவ்வக வடிவப் பாறை ஒன்று வனத்துக்கு நடுவே காணப்படுகிறது. இங்கு வாழும் பூர்வகுடி மக்கள் செவிவழிச் செய்தியாக ஒரு புராண வரலாற்று நிகழ்வைக் குறிப்பிடுகின்றனர். அதாவது, பாண்டவர்கள் இங்கு வந்து தங்கியிருந்த வேளையில், தங்கள் வசம் எடுத்து வந்திருந்த விலை மதிக்கவியலாத ஏராளமான பொன், வைர, வைடூரியங்களை பாதுகாப்பு காரணத்துக்காக ஆழக்குழி தோண்டி மறைத்து வைத்தனர். அந்த பொக்கிஷங்கள் வைத்திருக்கும் இடத்தை குறிப்பதற்கு பீமன் அங்கே ஒரு பெரிய பாறையை நிறுத்தி வைத்தான். எனவே, தொன்று தொட்டு மக்கள் அதனை பீமன் பாறை என்றே அழைக்கலாயினர். ஒரு கட்டத்தில் பாறைக்குக் கீழே கணக்கு, வழக்கில்லாத அளவு பொன்னும், மணியும் இருக்கிற விசயம் அரசல் புரசலாக மக்களிடையே பரவிவிட்டது. அதனால் மக்கள் அவ்விடத்தை காரணப்பெயரால் கஜானாபாறை என அழைக்கத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. ஒரு சமயம் போடி ஜமீன்தார் இப்பகுதிக்கு வந்த வேளையில் அவருக்கு உறுதுணையாக போடி, ரெங்கநாதபுரம், தேவாரம், பழனி செட்டிபட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பாமர மக்களும் நூற்றுக்கணக்கில் உடன் வந்தனர். அப்போது ஜமீன்தார் உத்தரவுப்படி அடர்ந்து புதராய் மண்டிக் கிடந்த காட்டைத் திருத்தி நாடாக மாற்றி அங்கே விவசாயம் செய்ய ஆரம்பித்தனர். அன்றைக்கே இப்பகுதி மக்கள் தேயிலை, மிளகு, ஏலக்காய் ஆகிய பணப்பயிர்களின் விளைச்சலால் பெரும் செல்வந்தராய் வளர்ந்துள்ளனர். நாள்கள் கடந்தன. பொருளாதாரமும், ஜனத்தொகையும் அங்கு கணிசமாகக் கூடியது. தங்களது நித்ய வழிபாட்டுக்கு ஒரு கோயிலை எழுப்பிட ஊரார் கூடி முடிவெடுத்தனர். பின்னர் ஆச்சாரியார்களிடம் ஆலோசனை கேட்டனர். அதன்படி மைசூர் மலையின் மேல் வீற்றிருந்தருளுகிற ஸ்ரீ சாமுண்டீஸ்வரியின் மறு அம்சமாகத் திகழும் ஸ்ரீ ராமலிங்க செüடேஸ்வரி அம்மனை கருவறை மூலவராக பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். அம்பாளின் வலப்புறம் பரம்பொருளாகிய ஈசன் ராமலிங்கர் என்னும் நாமத்துடன் வீற்றிருக்கிறார். கோயிலில் கால பைரவர், வீரபத்திரர், விநாயகர், பாலசுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட தெய்வங்களையும் தரிசிக்கலாம். தினமும் இருகால பூஜை நடைபெறுகிறது. சித்திரை தமிழ் வருடப்பிறப்பு, பிரதோஷம், அம்மனின் அவதார தினமான ஆடி அமாவாசை, நவராத்திரி கொலு உற்சவம், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை மகா தீபம், மார்கழி 30 நாள்கள் திருப்பள்ளியெழுச்சி ஆகிய விழாக்கள் ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக மூன்று நாள்கள் கொண்டாடப்படும் தைப்பூச விழா இங்கு வெகு பிரசித்தம். தைப்பூச விழாவின் முன்னதாக, நம் தமிழ் மண்ணில் ஓடும் புண்ணிய நதிகள் ஏதாவது ஒன்றிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விழா துவங்கும். எந்த நதி தீர்த்தம் எடுத்து வரப்பட வேண்டும் என்பதை அம்பாள் உத்தரவின் மூலமாகவே ஆண்டுதோறும் தீர்மானிக்கின்றனர். ஸ்ரீ ராமலிங்க செüடேஸ்வரி அம்மனை வழிபட்டால் வாழ்வில் சகல துயர்களும் விலகி, பொன்னும் பொருளும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை! தரிசனத்துக்காக காலை 6.30 மணி முதல் 7.30 மணிவரையும், மாலை 6 மணிமுதல் இரவு 7.30 மணிவரையும் திறந்திருக்கும் கஜானா பாறை ஸ்ரீ ராமலிங்க செüடேஸ்வரி அம்மன் கோயில், தேனி } மூணாறு (வழி போடி மெட்டு) நெடுஞ்சாலையில் சுமார் 70 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. - அருப்புக்கோட்டை வெ.கணேசன் தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை