சென்னை பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ சேவை நாளை முதல் இயங்காது என்ற தகவலுக்கு மெட்ரோ நிர்வாகம் மறுப்பு. பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் ச.ஜோசப் விஜய். - DNS சென்னை பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை பூந்தமல்லி முதல் வடபழனி இடையேயான மெட்ரோ சேவை கட்டுமானப் பணிகள் இன்னும் முடிக்கப்படாததால் நாளை முதல் சேவை இருக்காது என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. போரூர் முதல் வடபழனி இடையே ரயிலை இயக்க பெறப்பட்ட தற்காலிக அனுமதி நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து நிரந்தர அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் ஜோசப் விஜய் இருவரும் இணைந்து கடந்த அக். 11 ஆம் தேதி கொடியசைத்துத் தொடக்கிவைத்தனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயங்கும்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗