பூட்டானில் பனி ஏரி உடைப்பு: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
பூட்டானில் பனி ஏரி உடைப்பு: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட்

பனி ஏரி | குறியீட்டுப் படம் புதுடெல்லி: பூட்டானின் லெம்தாங்க் பகுதியில் பனி ஏரி உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். லெம்தாங்க் பகுதியில் பனி ஏரி உடைந்ததை அடுத்து அதில் இருந்து வெளியேறும் நீர், மோ சு (Mo Chhu) நதி வழியாக சங்கோஷ் நதியை நோக்கி பாய்ந்து வருகிறது. இதனால், டார்ஜிலிங் மலைப்பகுதிகள், தெராய், துவார்ஸ் பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். டார்ஜிலிங் தொகுதி பாஜக எம்பி ராஜு பிஸ்தா, சங்கோஷ் நதி மற்றும் அதன் துணை நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தனது சமூக ஊடக பதிவின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். மேற்கு வங்க அமைச்சர் நிசித் பிரமாணிக் கூறுகையில், “மாநில பேரிடர் மேலாண்மைக் குழு முடுக்கிவிடப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்து வந்து கொண்டிருக்கிறது. மேலும், பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் இருக்குமாறு தன்னார்வலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளார்கள். வெள்ள நீர் அடுத்த ஐந்து முதல் ஆறு மணி நேரத்துக்குள் சமவெளிப் பகுதிகளை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அப்பகுதியில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.” என தெரிவித்துள்ளார். அலிபுர்துவார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் ஷா, “மக்கள் பீதியடைய வேண்டாம். பூட்டான் அதிகாரிகள் மற்றும் பல்வேறு பேரிடர் மீட்பு அமைப்புகளுடன் இணைந்து நிலையை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநில பேரிடர் மீட்புப் படை ஏற்கெனவே அப்பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையும் அங்கு வந்து கொண்டிருக்கிறது. அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உதவ சிவில் பாதுகாப்பு பணியாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். சுமார் 4,000 முதல் 5,000 வரையிலான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பள்ளி கட்டிடங்கள் நிவாரண மையங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், 6,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர உள்ளனர். நிவாரண மையங்களில் உலர்ந்த உணவுகள், குடிநீர், கழிப்பறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை நிர்வாகம் செய்துள்ளது. நீர் ஓட்டத்தின் வேகம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும், சங்கோஷ் நிதியால் பாதிப்பு ஏற்படக்கூடும் என கருதி சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை