புண்ணியம் தரும் புனித நீராடல்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
புண்ணியம் தரும் புனித நீராடல்!

ஐப்பசி மாதத்தில் சூரிய பகவான் துலா ராசியில் பலம் குறைந்த நிலையில் சஞ்சரிக்கிறார். ஐப்பசி மாதத்தில் சூரிய பகவான் துலா ராசியில் பலம் குறைந்த நிலையில் சஞ்சரிக்கிறார். வானியல்படி, வெப்பம் மற்றும் பகல்பொழுது குறைவாகவும்; மழை மற்றும் இரவு நேரம் மிகுதியாகவும் அமைகிற இக்கால நிலையில் அதிகாலைக் குளியல் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இவற்றையொட்டியே தீபாவளி முதலான பண்டிகைகள் இம்மாதத்தில் கொண்டாடப்படுகின்றன. துலா மாதமாகிய ஐப்பசி மாதத்தில் மயூரம் எனப்படுகிற மயிலாடு துறையில் காவிரிதுலா ஸ்நானம் என்கிற அடிப்படையில் ஐப்பசி நீராடல் பெருவிழா நிகழ்த்தப்பெறுவது மரபாக உள்ளது. காவிரிக்கரையில் உள்ள 6 சிவ தலங்கள் காசிக்கு நிகரானவை. திரு மயிலாடுதுறை, திருவையாறு, திருவெண்காடு, திருஇடைமருதூர், திருவாஞ்சியம், திருசாய்க்காடு. இவற்றுள் மிகுந்த சிறப்புடையது மயிலாடுதுறை. ஏன் தெரியுமா? ஸ்ரீ காசிவிசுவநாதரே தமது பரிவாரங்களுடன் துலா ஸ்நானம் செய்வதற்காக இம்மாதம் முழுவதும் மயூரத்தில் எழுந்தருள்வதாக ஐதீகம். இத்தலத்தில் சப்தரிஷிகள் வழிபட்ட ஏழு காசிவிசுவநாதர் ஆலயங்கள் உள்ளமையே இதற்கு அத்தாட்சி. அம்மையும், அத்தனும் மயிலுறு கொண்டு ஆடிக் களித்த தலமாகையால் "மயூரம்' (மயூரம் } மயில்) என்ற பெயர் உண்டாயிற்று. இத்தலத்தினைச் சுற்றி நாற்புற திசைகளிலும் வள்ளலார் என்கிற திருநாமம் உடையவராகவும் பெருமான் விளங்குகிறார். ஒரு சமயம், தன் மனதில் ஆணவம் தோன்றாமல் இருக்க, இதே காவிரிக்கரையிலேயே நந்தி தவமிருந்தார். நந்தியின் கடும் தவத்துக்கு இரங்கிய பெருமான் தட்சிணா மூர்த்தி வடிவத்துடன் காட்சியளித்து அளப்பறிய ஞானத்தை வழங்கியதுடன் தனக்குரிய வாகனமாகவும் ஏற்று அருளினார். இந்த வரலாறு நிகழ்ந்த இடம் உத்திரமாயூரம் எனப்படுகிறது. மூலவர் ஞானவள்ளலாகிய வதாரண்யேஸ்வர். இறைவி ஞானாம்பிகை. இங்குள்ள தட்சிணாமூர்த்தி நந்தி வாகனத்தில் அமர்ந்தபடி காட்சி தருவது அதிசயம். தவிர இவருக்கு முன்னேயும் நந்தியெம்பெருமான் இடம் பெற்றிருப்பது கூடுதல் விசேஷம். மயூரநாதரைச் சுற்றி நான்கு திசைகளிலும் கோயில் கொண்டுள்ள வள்ளல்களில் இவர் கைகாட்டும் வள்ளல் என்று சிறப்பிக்கப்படுகிறார். ஒரு சமயம் கண்ணுவ மகரிஷி கங்கையில் நீராடுவதற்காக காசிக்குச் செல்கிற வழியில் இத்தலத்தினைக் கடந்து செல்ல நேரிட்டது. எதிரே கரியதோற்றத்தில் மூன்று பெண்களைக் கண்ட முனிவர் ஐயத்துடன் விலகினார். ஆனால், அப்பெண்களோ தாங்கள் மூவரும் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிப்பெண்கள் என்று சொன்னவுடன், முனிவருக்கு திகைப்பு உண்டாயிற்று. பூலோகத்தினர் தங்களது பாவ விமோசனத்துக்காக எங்களிடம் நீராடுவதால் நாங்கள் இப்படி ஆகிவிட்டோம் என்று சொன்னார்கள். மேலும் காவிரியில் நீராடி தாங்கள் சுமந்த பாவத்தைப் போக்கிக் கொள்வதற்காக வந்து கொண்டிருப்பதாகவும் கூறினர். காவிரியின் சிறப்பினை அறிந்த முனிவர் தாமும் அங்கேயே நீராடி தவமிருந்து வரங்களைப் பெற்றார் என்கிறது தலமகாத்மியம். ஐப்பசி மாதம் முழுவதுமே விதவிதமான வாகனங்களில் சிவபரிவாரங்கள் வீதியுலா காண்பது மயூரத்துக்கே உரிய சிறப்பு. துலா மாதத்தில் நீராடுவதற்காக உள்ள காவிரித் துறைக்குத் "துலா கட்டம்' என்று பெயர். மாத கடைசி தினத்தில் தீர்த்தவாரியுடன் இப்பெருவிழா பூர்த்தி அடைகிறது. "கடைமுழுக்கு' என்று இதனை அழைக்கின்றனர். தவிர, இன்னொரு காரணமும் உண்டு. காவிரி கடலில் கலக்கும் இடத்துக்கு (பூம்புகாருக்கு) முந்தையதாக உள்ள கடைசி புனித நீராடலுக்கு உரிய இடம் மயிலாடுதுறை தான். எனவே இங்கு செய்யப்பெறும் துலா ஸ்நானம் சிறப்பானதாக "கடைமுழுக்கு' என்கிற வகையில் போற்றப்பெறுகின்றது. சிவபக்தியில் சிறந்த அனவித்யை மற்றும் நாதசர்மா தம்பதிகள் உடல் குறைபாடு உடையவர்கள். துலா ஸ்நானம் செய்வதற்காக மயூரத்துக்குப் புறப்பட்ட அவர்கள் பல இடையூறுகளைத் தாண்டி மயூரத்தினை அடையும் போது நள்ளிரவாகி விட்டது. அன்றோடு ஐப்பசி கடைமுழுக்கு முடிந்து மறுநாள் கார்த்திகை மாதம் தொடங்கி விட்டது. இவ்வளவு முயன்றும் கிடைக்கவில்லையே என்று மனம் வருந்தியவர்களுக்கு இரங்கிய சிவபெருமான் தரிசனம் அளித்தார். கார்த்திகை முதல் தினமான அன்று காவிரியில் மூழ்கி நீராடிய அவர்களுக்கு ஐப்பசி மாதம் முழுவதும் முழுக்காடிய பலனை அளித்தருளினார். மனம் மகிழ்ந்த தம்பதிகள் ஏதேனும் இடர்ப்பாடுகளால் ஐப்பசியில் நீராடத் தவறி, கார்த்திகை முதல்தினத்தில் முழுகி நீராடுவோர் எவராயினும் அவர்களுக்கும் இவ்விதமே அருள வேண்டும் என பிரார்த்தித்தனர். இந்நிகழ்வினைப் போற்றும் விதமாக இன்றளவும் கார்த்திகை மாதத்து முதல் தினமும் முடவன் முழுக்கு என்ற பெயரால் இங்கு போற்றப் பெறுகிறது. காவிரியில் துலா ஸ்நானம் செய்பவர்கள் அனவித்யை நாதசர்மா தம்பதிகளை மனதார வணங்கினால்தான் அவர்களுக்கு முழுப் பலனும் கிடைத்திடும் என்பது நம்பிக்கை. மயூரத்துக் காவிரியின் கரையில் செய்யப்பெறும் தவம், தானம், நீத்தார் கடன் முதலான புண்ணிய காரியங்களுக்கும் பலமடங்கு புண்ணிய பலன்கள் உண்டு. ஏனென்றால், ஐப்பசி அமாவாசை தினத்தன்று பூமியில் உள்ள அறுபத்தியாறு கோடி தீர்த்த தேவதைகளும் மயிலாடுதுறையில் உள்ள காவிரியில் தீர்த்தமாடுவதாக ஐதீகம். இதனடிப்படையில் வள்ளலார் கோயிலில் உள்ள கங்கையம்மன் காவிரியில் தீர்த்தம் அளிக்கும் ஐதீகம் மிகவும் விசேஷமானது. எனவே முடவன் முழுக்கு வரை இங்கு காவிரியில் புனித நீராடுதல், காவிரியை வழிபடுதல், சுமங்கலிகளுக்கு செüபாக்கிய பொருள்களை அளித்தல், நீத்தார் கடன் ஆற்றுதல் போன்றவற்றை செய்வது சிறப்பு. இதனால் பாவங்கள் நீங்கும், ஆரோக்கியம் நீடிக்கும், ஆயுள் அதிகரிக்கும், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும், புண்ணியப் பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை