புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதால், அருகிலுள்ள பழைய வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்ட பகுதியில் தற்காலிகப் பேருந்து நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை காணப்பட்ட மக்கள் கூட்டம். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதால், அருகிலுள்ள பழைய வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்ட பகுதியில் தற்காலிகப் பேருந்து நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. போதிய அறிவிப்பும், வசதியும் இல்லாததால், பொதுமக்கள் தங்கள் பேருந்துகளைத் தேடித் தேடிப் பிடிப்பதில் சிரமத்துக்குள்ளாகினா். புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா முடியும் வரை இந்தச் சிக்கல் தொடரும் என்றாலும், மாநகராட்சி நிா்வாகமும் போக்குவரத்துக் கழக நிா்வாகமும் மக்களுக்கு உரிய அறிவிப்புகளை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுகையில் தற்காலிக பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗