புதுக்கோட்டை வந்தார் முதல்வர் விஜய்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
புதுக்கோட்டை வந்தார் முதல்வர் விஜய்

முதல்வர் ஜோசப் விஜய், திங்கள்கிழமை காலை புதுக்கோட்டை வந்தடைந்தது பற்றி... புதுக்கோட்டையில் முதல்வர் விஜய். அரசு விழாவில் பங்கேற்று, புதிய பேருந்து நிலையம், நவீன உள்விளையாட்டரங்கம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைப்பதற்காக முதல்வர் ஜோசப் விஜய், திங்கள்கிழமை காலை புதுக்கோட்டை வந்தடைந்தார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர் சாலை வழியாக புதுக்கோட்டைக்குப் புறப்பட்டார். புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூரில் அவருக்கு தவெகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். குறிப்பாக இந்தப் பகுதி விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள் வருகிறது என்பதால், முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட தவெக செயலருமான சி. விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் ஏராளமானோர் திரண்டு வரவேற்பளித்தனர். இதேபோல, மண்டையூர், கீரனூர் பகுதிகளிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்து முதல்வர் விஜய்க்கு வரவேற்பு அளித்தனர். இந்தப் பகுதிகளும் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள் வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நார்த்தாமலை, சிப்காட் பகுதிகளில் மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு சுமார் ஒன்றரை மணி நேரப் பயணமாக புதுக்கோட்டை நகருக்குள் நுழைந்தார். அவருடன், அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜா. முகமது பர்வேஸ் உள்ளிட்டோரும் வந்தனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை