புழல் சிறையில் அன்பில் மகேஸ்! முதல் வகுப்பு அறையில் என்னென்ன வசதி?

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
புழல் சிறையில் அன்பில் மகேஸ்! முதல் வகுப்பு அறையில் என்னென்ன வசதி?

புழல் சிறையில் அன்பில் மகேஸுக்கு வழங்கப்படும் உணவு பற்றிய விவரங்கள் வெளியாகியிருக்கிறது. அன்பில் மகேஸ் பொய்யாமொழி - (கோப்புப் படம்) தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின்போது, தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் சுமாா் ரூ.100 கோடி அளவில் பணம் வசூலித்து மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கைது செய்யப்பட்ட அன்பில் மைகேஸ், சென்னையை அடுத்த புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்த போது, அவருக்கு உடல்நலப் பிரச்னை இருக்கிறது, கணைய நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதால் எண்ணெய் இல்லாத உணவு வழங்க வேண்டும் என்று அவரது தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை புழல் சிறையில் முதல் வகுப்பில், தனி அறையில் அன்பில் மகேஸ் அடைக்கப்பட்டுள்ளார். முதல் வகுப்பு தனி அறை என்றால், அதில் கட்டில், மெத்தை, மின் விசிறி வசதி வழங்கப்படும். அவரது அறையில் கழிப்பறை வசதியும் உள்ளது. ஆனால் ஏசி வசதி இல்லை. நீதிமன்றக் காவலில் அவர் வைக்கப்பட்டிருப்பதால் வழக்கமான ஆடைகளே அணியலாம். நீதிமன்றத்தில் சிறப்பு உணவு வழங்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், மருத்துவர்களின் அறிவுரைப்படி எண்ணெய் இல்லாத குழம்பு, சாதம், வேகவைத்த காய்கறிகள், ரசம், காய்கறி சூப் போன்றவைதான் வழங்கப்படும். இரவு உணவுக்கு சப்பாத்தி மற்றும் கஞ்சி, சாலட் போன்றவை கொடுக்கப்படுகிறது. ஆனால், அவருக்கு வெளியில் இருந்து கொண்டு வரப்படும் உணவு வழங்கப்படுவதில்லை. அதுபோல, முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டிருப்பதால் வாரத்தில் மூன்று நாள் அசைவ உணவு வழங்கப்படும். அசைவம் என்றால் கோழிக்கறி குழம்பு சாதம் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. செய்தித்தாள் வழங்கப்படும், சிறைத் துறையின் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வழக்கம் போல அவர் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் செய்ய அனுமதிக்கப்படுகிறார். சிறையில் அவரை வேறு கைதிகள் யாரும் சந்திக்க முடியாது. அவரது அறைக்கு சிறப்புப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். அவரது குடும்பத்தினர், வழக்குரைஞர், நண்பர்கள் சந்திக்க மட்டும் அனுமதி உண்டு. வழக்கமாக ஏசி வசதி கொண்ட அறையில் உறங்கும் வழக்கம் இருப்பதாலும், புழல் சிறையில் கொசுத் தொல்லை இருப்பதாலும் அன்பில் மகேஸ் இரவில் உறங்க முடியாமல் அவதிப்படுவதாகவும் சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. செவ்வாய்க்கிழமை, பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சிறையில் அன்பில் மகேஸை சந்தித்துப் பேசியிருந்தார். மீண்டும் இன்று காலை உதயநிதி புழல் சிறைக்கு வந்து தன்னுடைய நண்பரை சந்தித்துள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை