புழல் சிறையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க நீதிமன்றம் அனுமதியளித்திருப்பது பற்றி... நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர் - DNS புழல் சிறையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாககூறி, ரூ. 100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேஸை கடந்த அக். 26 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். இதனிடையே, அன்பில் மகேஸை 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, அன்பில் மகேஸ் தரப்பில், ”நீதிமன்ற உத்தரவை மீறி முதல் வகுப்பில் சரியான உணவு வழங்கவில்லை. மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சப்பாத்தி மட்டுமே வழங்கப்பட்டது. அதனை அன்பில் மகேஸால் சாப்பிட முடியவில்லை. உடல் எடை குறைந்துவிட்டது. இரவு நேரத்தில் விளக்கை அணைக்காமல் துன்புறுத்துகின்றனர். அவருக்கு சிறையில் வீட்டு உணவு வழங்க அனுமதி வழங்க வேண்டும்” என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிமன்றம் அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதியளித்துள்ளது. விசாரணைக் கைதி என்ற அடிப்படையில் உடல் நலனுக்கேற்ற உணவு பெற உரிமை உள்ளது எனவும் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
📢 விளம்பரம் • Advertisement
விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗