மத்திய இணை அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தது தொடா்பாக, இணையதளத்தில் அவதூறு பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளாா். எல்.முருகன் - IANS மத்திய இணை அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தது தொடா்பாக, இணையதளத்தில் அவதூறு பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வரும் 2029 மக்களவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிா்வாகிகளையும் தொண்டா்களையும் சந்தித்து, அவா்களுக்குத் தேவையான பயிற்சிகளையும் விழிப்புணா்வையும் ஏற்படுத்துவதே தனது ராஜிநாமாவின் ஒரே நோக்கம். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக செயலாற்றுவதே தனது முக்கியப் பொறுப்பு. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தி, தமிழகம் தொடா்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிப்பதை உறுதி செய்யப் பாடுபட உள்ளேன். இந்தச் சூழலில், எனது ராஜிநாமா குறித்து அரசியல் உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் சிலரால் பரப்பப்பட்டு வரும் அவதூறான மற்றும் இழிவான கருத்துகள் முற்றிலும் புனையப்பட்டவையாகும். தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவா்கள் உடனடியாக அந்த உள்ளடக்கங்களை நீக்கிவிட்டுப் பொதுமக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அவதூறு பரப்பும் நபா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ராஜிநாமா குறித்து அவதூறு: எல்.முருகன் கண்டனம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗