ராஜிநாமா செய்ததன் நோக்கம் என்ன? அவதூறு கருத்துகளுக்கு எல். முருகன் மறுப்பு!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ராஜிநாமா செய்ததன் நோக்கம் என்ன? அவதூறு கருத்துகளுக்கு எல். முருகன் மறுப்பு!

மத்திய இணையமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தது குறித்தும் தன் மீதான அவதூறு குற்றச்சாட்டுகளுக்கும் எல். முருகன் விளக்கம் அளித்துள்ளது பற்றி... எல்.முருகன் - IANS தனக்கு எதிராக, உண்மைக்குப் புறம்பான, அவதூறான மற்றும் இழிவான பிரசாரங்களைப் பரப்பும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எல். முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய இணையமைச்சராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த எல். முருகன் தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததால் அந்த இடத்துக்கு வருகிற நவ. 12 ஆம் தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்துக்கு பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி (74) அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் எல். முருகன் தனது பதவியை ராஜிநாமா செய்தது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு அவர் தற்போது விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கையில், "முனைவர் எல். முருகன் ஆகிய நான், 13.10.2026 அன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும், மத்திய அரசின் தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் பதவியிலிருந்தும் விலக பிரதமரிடம் அனுமதி கோரி, அவரின் அனுமதி பெற்றதும் எனது ராஜிநாமாவைச் சமர்ப்பித்தேன். எனது ராஜிநாமாவின் ஒரே நோக்கம், 2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, அடிமட்டத்திலிருந்து தொடங்கி கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை மேம்படுத்தி, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே ஆகும். நாட்டின் குடிமக்களின் நலனுக்காகவும், குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், மேற்கண்ட பணியை மேற்கொள்வது எனது பொறுப்பாகும். மத்திய அரசின் நிலையான ஆதரவைப் பெற்று, மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களுடன் இணைந்து தமிழ்நாடு தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். மேலும், தமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்துவது எனது கடமையாகும். இதன் மூலம், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் மத்திய அரசு எந்த அளவிற்கு தனது பங்களிப்பை வழங்கி வருகிறது என்பதை மக்கள் அறிந்துகொள்ள முடியும். கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை மேம்படுத்தும் நோக்கில் நான் மேற்கொண்டுள்ள தற்போதைய பொறுப்பை ஏற்றுக்கொள்ள இயலாத சிலர், டிஜிட்டல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வாயிலாகத் தேவையற்ற மற்றும் இழிவான கருத்துகளைத் தெரிவித்து அவற்றைப் பரப்பி வருகின்றனர். இத்தகைய கருத்துகள் அவதூறானவைமட்டுமல்லாமல், வன்மையாகக் கண்டிக்கத்தக்கவையும் ஆகும். இந்தக் கருத்துகள் அனைத்தும் எவ்வித ஆதாரமும் அற்றவை; முற்றிலும் புனையப்பட்டவை; தீய உள்நோக்கம் கொண்டவை: அரசியல் நோக்கங்களால் தூண்டப்பட்டவை. நான் கடின உழைப்பின் மூலம் பெற்றுள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதும், எனது ராஜிநாமாவிற்குப் பல்வேறு தவறான அர்த்தங்களைக் கற்பித்து, பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை உருவாக்குவதுமே இவற்றின் ஒரே நோக்கமாகும். நான் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவன். அன்றாடக் கூலி வேலை செய்து, கால்நடைகளை மேய்த்து வந்த எனது பெற்றோர், இன்றும் கொணூர் கிராமத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். தங்களது மகன் ஒருநாள் மத்திய அரசில் பணியாற்றுவான் என்று அவர்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்க முடியாது. தேசியவாதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் இணைந்து பணியாற்றிய காலத்தில், எப்போதும் தேசமும், கொள்கைகளுமே முக்கியம் என்பதை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டு வருகிறேன். தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றியபோது, நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பதிவு செய்து கடும் நடவடிக்கைகள் எடுத்தது முக்கிய தருணங்கள். மாநிலங்களவை உறுப்பினராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டது. மத்திய இணையமைச்சராக இரண்டு முறை பணியாற்ற எனக்கு கிடைத்த வாய்ப்புகள் என அனைத்தும் என் மீதான பிரதமர் நம்பிக்கையின் வெளிப்பாடே காரணமாக அமைந்தது. தகவல் மற்றும் ஒலிபரப்பு நாடாளுமன்ற விவகாரங்கள், மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்பு ஆகிய அமைச்சகங்களில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு, நமது நாட்டையும் அதன் மக்களையும் குறித்த எனது புரிதலை விரிவுபடுத்தியது. கடினமாக உழைக்கும் கட்சித் தொண்டர்களை பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைமையும் தொடர்ந்து அங்கீகரித்து வருவது. ஒவ்வொரு கட்சித் தொண்டருக்கும் வலிமையையும் ஊக்கத்தையும் அளித்து வருகிறது. குடும்பப் பின்னணி எதுவாக இருந்தாலும், அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவற்றுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை தொண்டர்களுக்கு அளிக்கிறது. கட்சியிடமிருந்தும், பிரதமரிடம் இருந்தும் நான் பெற்று அனைத்தும், எனது பொறுப்புணர்வை மேலும் ஆழப்படுத்தி வருகின்றன. பிரதமர் தொடர்ந்து அளித்து வரும் ஊக்கம், பொதுவாழ்வில் ஈடுபடக் காரணமாக இருந்த பணிகளுக்கு என்னை மேலும் அதிகமாக அர்ப்பணிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி வருகிறது. எனவே, தற்போது தமிழ்நாட்டில் கட்சியை வலுப்படுத்தும் பணியில் முழுநேரமாக என்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளேன். 2029 மக்களவைத் தேர்தலுக்காகக் கட்சியைத் தயார்படுத்தும் பணியில், தமிழக பாஜக மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து எனது முழு நேரத்தையும் ஆற்றலையும் செலவிடவுள்ளேன். ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு தெருவிற்கும் சென்று, மக்களைச் சந்தித்து. நமது கட்சித் தொண்டர்களுக்குத் துணையாக நின்று. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கட்சியின் செல்வாக்கையும் அமைப்பையும் விரிவுபடுத்தும் பணியில் முழுமையாக ஈடுபடவுள்ளேன். அனைவருடனும் இணைந்து, அனைவருக்கும் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை என்ற பிரதமரின் செய்தியை ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்கும், வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்தில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். 2029 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை வலுப்படுத்துவதற்காக, அடிமட்ட அளவில் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றுவதே எனது ராஜிநாமாவின் ஒரே நோக்கமாகும். அரசியல் உள்நோக்கத்துடனும் தீய எண்ணத்துடனும் சிலரால் முன்வைக்கப்படும் பிற குற்றச்சாட்டுகளும் தேவையற்ற அவதூறுப் பிரசாரங்களும் உண்மைக்குப் புறம்பானவை. இத்தகைய கருத்துகளைப் பரப்புவது, எனது நற்பெயருக்கும் மதிப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் அவதூறுச் செயலாகும். மேலும், இவை பிற தனிநபர்களையும் பாதிக்கக்கூடியவை. இதன் மூலம், தமிழ்நாட்டு மக்களிடையே தேவையற்ற அமைதியின்மையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் பரந்த நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. இத்தகைய செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே, எனது ராஜிநாமா தொடர்பாக டிஜிட்டல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து உள்ளடக்கங்கள். பதிவுகள் மற்றும் பிரசுரங்களையும் உடனடியாக நீக்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், எவ்வித ஆதாரமுமின்றி, பொறுப்பற்ற முறையிலும் தீய உள்நோக்கத்துடனும், எனது நற்பெயருக்கும் பிற்கும் கடுமையான களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை திரியிட்டதற்காகப் மக்கள் முன்னிலையில் மன்னிப்புக் கோருமாறும் கேட்டுக்கொள்கிறேன். ஊடகத் துறையைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட நபர்கள், சமூக ஊடகப் பக்கங்களின் நிர்வாகிகள், உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், இத்தகைய அவதூறான உள்ளடக்கங்கள் ஏதேனும் வெளியிடப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக நீக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனைச் செய்யத் தவறினால், எனக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான, அவதூறான மற்றும் இழிவான பிரசாரங்களைப் பரப்பும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக, அவரவர் சொந்தச் செலவில், குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட விளக்கத்தின் மூலம் விவகாரம் இந்த தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக நம்புகிறேன். எனது ராஜிநாமாவின் அடிப்படை நோக்கம் தமிழ்நாட்டு மக்களுக்குச் சேவையாற்றுவதும், கட்சியை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்தி வளர்ச்சி அடையச் செய்வதுமே ஆகும் என்பதைப் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை