மஹாவீர் கர்ணா சிறப்பு போஸ்டர் வெளியீடு.... நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் மஹாவீர் கர்ணன் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. மகாபாரத இதிகாச நாயகர்களில் ஒருவரான மஹாவீர் கர்ணன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய திரைப்படத்தை ரமேஷ் வர்மா இயக்குகிறார். ரூ.150 கோடி பொருள் செலவில் தயாராகவுள்ள இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் படமாக்குகின்றனர். பென் மூவீஸ் (PEN MOVIES ) ஜெயந்திலால் கடா வழங்க (JAYANTILAL GADA PRESENTS), ஆர்வி ஸ்டூடியோஸ் - ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் (RV STUDIOS & SRI NEELADRI PRODUCTIONS) இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. இத்திரைப்படத்துக்காக சிறப்பு அரங்குகள், புராண காலத்தைக் கண்முன் நிறுத்தும் கலை வடிவமைப்புகள், உலகத்தர VFX தொழில்நுட்பம் என மொத்தத்தில் ஒரு பிரமிக்க வைக்கும் காட்சி விருந்தாக இப்படம் உருவாக்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், ராகவா லாரன்ஸின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் சிறப்பு போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். பென்ஸ், காஞ்சனா - 4 ஆகிய திரைப்படங்களிலும் ராகவா லாரன்ஸ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ராகவா லாரன்ஸ் பிறந்த நாள்: மஹாவீர் கர்ணா சிறப்பு போஸ்டர்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗