ராகுல் காந்தி பெரியாரிஸ்டாகி விட்டார்! மாணிக்கம் தாகூர் சிறப்பு நேர்காணல்!

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ராகுல் காந்தி பெரியாரிஸ்டாகி விட்டார்! மாணிக்கம் தாகூர் சிறப்பு நேர்காணல்!

காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் சிறப்பு நேர்காணல்... மாணிக்கம் தாகூர் எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையரை மாற்றக் கோரி தீவிர போராட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி முன்னெடுத்துவரும் நிலையில், அக்கட்சியின் செயல்பாடுகள் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், தினமணி செய்தியாளர் ம.பா.இளையபதிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவோரை நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பவர்கள் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளாரே? மக்களை மொழியாலும், இனத்தாலும், மதத்தாலும் பிரிக்கும் சூழ்ச்சி அரசியல்தான் பிரதமரின் தாரக மந்திரமாக உள்ளது. உண்மையான தேச நலனுக்காக ஜனநாயக வழியில் போராடும் இளைஞர்கள், எதிர்க்கட்சியினரை பாஜக தொண்டர்களை வைத்தும், அதிகாரத்தை வைத்தும் ஒடுக்குகிறார். பிரதமர் பதவியில் இருப்பதாலேயே அவர் பேசுவதையெல்லாம் உண்மை என்று நம்பிவிட முடியாது. வெளிநாடுகளின் தூண்டுதலின் பேரிலேயே அந்தப் போராட்டங்கள் நடைபெறுவதாக பாஜக குற்றம்சாட்டுகிறதே? எஸ்ஐஆர் என்ற பெயரில் ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும் என்று போராடுகிறோம். அதை மூடி மறைக்கவும், எங்களது போராட்டத்தை சிறுமைப்படுத்தவும்தான் இந்த அஸ்திரத்தை பாஜக எடுத்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தில் இண்டி கூட்டணியைவிட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கு இளைஞர்களின் ஆதரவு அதிகமாக உள்ளதே? அப்படியெல்லாம் இல்லை. தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரி ராகுல் காந்தி தலைமையில் இண்டி கூட்டணித் தலைவர்கள் நடத்திய பேரணியில் அதிக அளவில் கூட்டம் கூடியது. சொல்லப்போனால் நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமாவுக்கு வித்திட்டவர் ராகுல் காந்திதான். ஞானேஷ் குமார் விவகாரத்தில் ராகுல் காந்தியை புறந்தள்ளிவிட முடியுமா? கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜனநாயக ரீதியில் போராடுவதை காங்கிரஸ் வரவேற்கிறது. நவம்பர் 1}ஆம் தேதி இண்டி கூட்டணி பேரணியில் எங்களின் பலத்தை பார்க்கத்தான் போகிறீர்கள். ஞானேஷ் குமாரை நீக்கக் கோரி திமுக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்? பாஜக கூட்டணிக் கட்சிகள் தவிர பெரும்பாலான அரசியல் கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும் என வலியுறுத்தின. ஆனால், பாஜக தனது கொள்கை எதிரி என்று கூறிவந்த திமுக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் மௌனமாகிவிட்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அதுகுறித்து கேள்வி எழுப்பியதற்காக என் மீது தனிப்பட்ட தாக்குதல்களை திமுக தொடுத்தது. தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக திமுகவை தீர்மானம் போட வைப்பதற்கே இவ்வளவு சிரமப்பட வேண்டியதாகிவிட்டது. வரும் நாள்களில் இதே நிலைப்பாட்டில் திமுக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழகம், கேரளத்தில் மட்டும் எஸ்ஐஆர் குறித்து காங்கிரஸ் பேசாமலிருப்பது சந்தர்ப்பவாத அரசியல் என திமுக விமர்சித்திருப்பது பற்றி... அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் எஸ்ஐஆர் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. அதனால்தான், அங்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்கிறோம். ஆனால், தமிழகம், கேரளத்தில் அத்தகைய வழக்குகள் பதியப்படவில்லை. தமிழகத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது, அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களின் உழைப்பால் எல்லா வாக்குகளும் காப்பாற்றப்பட்டுவிட்டன என்று கூறினார். ஆனால், இன்று எஸ்ஐஆரால் திமுக ஆட்சியைப் பறிகொடுத்ததாக மாற்றிப் பேசுகிறார். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் பேசி வருவதுதான் சந்தர்ப்பவாத அரசியல். திமுக முதுகில் காங்கிரஸ் குத்திவிட்டது என்று தொடர்ச்சியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருகிறாரே? உண்மையைச் சொல்லப்போனால், திமுகவுடன் சேர்ந்ததால்தான் ஒரு காலத்தில் 18}ஆக இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 5}ஆக குறைந்துள்ளது. இதற்காக நாங்கள்தான் வருத்தப்பட வேண்டும். திமுகவை காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் கட்சி எத்தனை முறை நெஞ்சில் குத்து வாங்கி உள்ளது என்பது மு.க.ஸ்டாலினுக்கு நன்றாகத் தெரியும். தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் அவர் இவ்வாறு பேசி வருகிறார். காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை அமைக்க திமுக முயன்று வருவதாகத் தெரிகிறதே... மூன்றாவது அணிக்காக மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, சந்திரசேகர் ராவ் என எல்லா கட்சிகளின் கதவுகளையும் திமுக தட்டிப் பார்த்துவிட்டது. ஆனால், அவர்களிடம் இருந்து பதில் ஏதும் வராததால், வேறு வழியில்லாமல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை நோக்கி திமுக நகர்ந்துள்ளது. மூன்றாவது அணி என்பது போகாத ஊருக்கு வழி தேடுவது போன்றதாகும். திமுகவின் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. இண்டி கூட்டணி சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக குறித்து அமைச்சர் ராஜ்மோகன் ஒரு வார்த்தைகூடப் பேசாதது ஏன்? அந்தக் கூட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டதன் மூலமாகவே நாங்கள் பேசுவதை தவெக ஆதரிக்கிறது என்பது உறுதியாகிறது. ஒவ்வொரு முறையும் அனுமன் நெஞ்சைப் பிளந்து காட்டியதுபோல், பாஜகவை எதிர்க்கிறோம் என்று தவெக நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் முதல்வர் விஜய் எப்போதும் இருப்பார் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. முதல்வர் விஜய் தேசியத் தலைவராக வேண்டும் என தவெகவினர் எதிர்பார்க்கின்றனர். இதில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? ஒரு கட்சியின் தலைவர் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டும் என தொண்டர்கள் நினைப்பதில் தவறேதும் இல்லை. முதல்வர் விஜய் தமிழகத்தின் முகம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று முதல்வர் விஜய்யே விரைவில் அறிவிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அமைச்சரவையில் இடம்பெற்ற பிறகு காமராஜர் ஆட்சி அமைப்போம் என்ற முழக்கத்தை காங்கிரஸ் கைவிட்டுவிட்டதா? லஞ்சம், ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகம், விவசாயம், கல்வி, தொழில் துறை வளர்ச்சி இவைதான் காமராஜர் ஆட்சி. அப்படிப் பார்த்தால் தற்போது தமிழகத்தில் தவெக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி ஆட்சி அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் பல லட்சம் பெற்றுக் கொண்டு அரசுக் கல்லூரி முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், இந்த ஆட்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதன் பொறுப்பு வகிக்கும் உயர் கல்வித் துறையில் 152 கல்லூரி முதல்வர்கள் ஒரு காசுகூட பெறாமல் நியமிக்கப்பட்டுள்ளனர். காமராஜர் ஆட்சியைப் படிப்படியாக நனவாக்கி வருகிறோம். திமுகவால் மறுக்கப்பட்ட மாநகராட்சி மேயர் பதவியை காங்கிரஸýக்கு தவெக வழங்குமா? தவெகவுக்கும் காங்கிரஸýக்கும் உறவு என்பது வெறும் தேர்தல் கால உறவு இல்லை. எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கான உரிய மரியாதையையும், இடத்தையும் தவெக எங்களுக்கு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்னை, மின்வெட்டு, போதைப் பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே? ஒரு ஆட்சி மீது மக்கள் வைத்துள்ள அளவுகோல் தேர்தலில் வெளிப்படும். அப்படிப் பார்த்தால் தவெக ஆட்சியை மக்கள் எந்த அளவுக்கு ஆதரிக்கிறார்கள் என்பது இடைத்தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டுள்ளது. மின்வெட்டு பிரச்னை முன்பு இருந்ததைப் போன்று இல்லை. போதைப் பொருள் பிரச்னை என்பது தவெக ஆட்சியில் வந்ததில்லை. இதை மத்திய உள்துறையின் தோல்வியாகத்தான் பார்க்க வேண்டும். இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தங்கள் பலத்தை நிரூபித்துள்ளதாக திமுக கூறுகிறதே? மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் கடந்த பொதுத் தேர்தலைவிட 8,000 வாக்குகள் ஒவ்வொரு தொகுதியிலும் திமுக இழந்துள்ளது. இடைத்தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடவில்லை. தேமுதிக, கொமதேக உள்ளிட்ட 5 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துதான் போட்டியிட்டது. அதிமுக மூன்றாவது இடத்துக்குப் போனதால் இரண்டாவது இடத்துக்கு வந்ததை திமுகவினர் பெருமையாகப் பேசிக் கொள்கின்றனர். கூட்டணிக்குள் பாமக வந்தால் விசிக விலகிக் கொள்ளும் என அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளாரே? எங்கள் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி பலமாக உள்ளது. இதே கூட்டணியில் ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்வோம். மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், பாஜகவைவிட்டு அன்புமணி வரமாட்டார். இது எங்கள் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகளின் சதி. எல்.முருகன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்தும், எம்.பி. பொறுப்பிலிருந்தும் ராஜிநாமா செய்திருப்பதை காங்கிரஸ் கட்சி எப்படிப் பார்க்கிறது? பாஜகதான் அவர் குறித்து குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எதற்காக முருகன் ராஜிநாமா செய்தார் என்பதை பாஜக வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அண்மைக்காலமாக பெரியார் ஈவெராவை காங்கிரஸ் உயர்த்திப் பிடிப்பதற்கு என்ன காரணம்? வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி பெரியார் ஈவெராவைப் பயன்படுத்தவில்லை. பெண் விடுதலை, சமூகநீதி, ஜாதி ஒழிப்பு போன்றவை குறித்த அவரது பேச்சு ராகுல் காந்தியை அதிகம் ஈர்த்துள்ளது. நாடாளுமன்றம் தொடங்கி அவர் செல்லும் இடமெல்லாம் பெரியார் ஈவெரா குறித்துப் பேசி வருகிறார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ராகுல் காந்தி பெரியாரிஸ்ட்டாக மாறிவிட்டார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை