ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்... மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - ANI மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமையுண்டு என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். ஹரியாணாவின் கர்னலில் இன்று (நவ. 5) நடைபெற்ற பாஜக பேரணியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது, ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களின் விவரங்கள் வெளியிடப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி, அவர் பேசியதாவது: “நீங்கள் (ராகுல்) இப்போதுதான் வியத்நாமில் இருந்து திரும்பி வந்தீர்கள். ஆனால், அதைப் பற்றி எதுவும் பேசவில்லை. ராகுல் அவர்களே உங்களின் அனைத்து வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும் மக்களிடம் விளக்கம் கூறுங்கள். வியத்நாமில் எத்தனை நாள்கள் தங்கினீர்கள், யாரையெல்லாம் சந்தித்தீர்கள் எதற்காகச் சென்றீர்கள் அங்கு என்னென்ன நிகழ்ச்சிகள் நடந்தன என்பது குறித்து கூறுங்கள். நீங்கள்தான் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் இதுபற்றி தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமையுண்டு” எனக் கூறியுள்ளார். இத்துடன், வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து ராகுல் காந்தி விமர்சித்து வரும் நிலையில், அதே வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் கேரளத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதும் எதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவியேற்றார்கள் என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ராகுலின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றி தெரிந்துகொள்ள..! - அமித் ஷா தாக்கு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗