ராமாயணா டிக்கெட் விற்பனை குறித்து... ராமாயணா படத்தின் காட்சிகள். - படம்: யூடியூப் / வேல்ட் ஆஃப் ராமாயணா. ராமாயணா திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பிர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகியுள்ள ராமாயணா வருகிற நவ. 5 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. ராமாயணத்தைத் தழுவி பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் அதிக பொருள்செலவில் உலகின் முன்னணி விஎஃப்எக்ஸ் நிறுவனங்களின் பங்களிப்பில் ஆச்சரியப்படும் வகையில் இந்த ராமாயணா உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இதன் டிக்கெட் முன்பதிவுகள் இந்திய அளவில் ஆரம்பமாகியது. ஆனால், ஹிந்தியிலேயே எதிர்பார்த்த வேகத்தில் முன்பதிவுகள் நடைபெறாமல் மந்தமாகவே இருப்பதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். முக்கியமாக, தில்லி, மும்பை, புனே பகுதிகளில் இன்னும் எந்தத் திரையும் ஹவுஸ்ஃபுல்லுக்கு முந்தையை நிலையைக் கூட எட்டவில்லை. இதனால், ஆயிரம் கோடியில் செலவில் உருவான திரைப்படத்திற்கு ஆதரவு இருக்குமா என்றும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமாயணா டிக்கெட் முன்பதிவில் மந்தம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗