ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் 9-ம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், பேரி கார்னர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகள் சாரிகா தேவி (14). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பள்ளி மாணவி சாரிகா தேவி வீட்டிலுள்ள மின்விசிறியின் கொக்கியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. போலீஸார் விசாரணை இதைத்தொடர்ந்து, மாணவி உயிரிழந்தது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராணிப்பேட்டை போலீசார் பள்ளி மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு 14 வயதுடைய பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன?. குடும்பப் பிரச்சினையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 9ஆம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டையில் அதிர்ச்சி.. வீட்டில் தனியாக இருந்த மாணவி செய்த காரியம்.. நடந்தது என்ன?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: oneindia.com (original report) ↗