ஆஸ்திரேலிய வீரர் லபுஷேனின் கோபத்தைத் தூண்டும் விதமாக தென்னாப்பிரிக்க வீரரின் செயல் இணையத்தில் வைரலாகி வருவது குறித்து... லபுஷேன் விக்கெட்டை கொண்டாட பிட்சை தாண்டிய ப்ரீட்ஸ்கே - படங்கள்: எக்ஸ் / ஃபேன்கோட் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேனின் விக்கெட்டை கொண்டாடும் விதமாக, அவரது கோபத்தைத் தூண்டும்படி தென்னாப்பிரிக்க வீரர் மேத்திவ் பிரீட்ஸ்கி செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேப்டவுனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீசியது. முதல் நாளில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிர்க்கா 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 330/4 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் நடந்த கொண்டாட்டம் கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேனின் விக்கெட்டை கொண்டாடும் விதமாக தென்னாப்பிரிக்க வீரர் மேத்திவ் பிரீட்ஸ்கி பிட்சை தாண்டி அவரது முக்கத்துக்கு நேராக கொண்டாடியது வைரலாகி வருகிறது. மார்னஸ் லபுஷேனின் கோபத்தை தூண்டும் விதமாக அவர் செய்த செயல் இணையத்தில் மீமாக மாறியுள்ளது. ரேஜ் பெயிட் (Rage bait) என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென இணையவாசிகள் கூறி வருகிறார்கள். ரேஜ் பெயிட் என்பது எதிரில் இருப்பவரை கோபப்படுத்தும்படி பதிவிடுவதைக் குறிக்கும் ஜென்ஸிக்களின் வார்த்தையாக இருக்கிறது. ஆக்ஸ்போர்டின் 2025ஆம் ஆண்டின் சிறந்த சொல் என்பதாக இந்த வார்த்தை பிரபலமானதும் குறிப்பிடத்தக்கது. ஐசிசி நடத்தை விதிமீறலுக்கு அபராதம் விதிக்கப்படும். மேத்திவ் ப்ரீட்ஸிக்கேவுக்கு இன்னும் எந்தவிதமான அபராதமும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Wait for it ð#SAvAUS pic.twitter.com/2NS83O1FJZ Breetzke is an elite rage baiter/rattler ðððð #SAvsAUS https://t.co/q6ub0h8Dil தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ரேஜ் பெய்ட்: லபுஷேன் விக்கெட்டை கொண்டாட பிட்சை தாண்டிய ப்ரீட்ஸ்கே..! வைரல் விடியோ!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗