ரகசிய தகவல்களை பெற பயன்படுத்தப்படும் 'ஹனி ட்ராப்' உத்தி: பைபிள், அர்த்தசாஸ்திரத்தில் உள்ள குறிப்புகள் - ஓர் வரலாற்றுப் பார்வை

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
ரகசிய தகவல்களை பெற பயன்படுத்தப்படும் 'ஹனி ட்ராப்' உத்தி: பைபிள், அர்த்தசாஸ்திரத்தில் உள்ள குறிப்புகள் - ஓர் வரலாற்றுப் பார்வை

பட மூலாதாரம், Getty Images தமிழ்நாட்டில் ஒரு மாதத்துக்குள் பணியில் இருக்கும் கடற்படை வீரர் ஒருவரும், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவரும் 'ஹனி ட்ராப்' தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். காதல் அல்லது தனிப்பட்ட உறவுகளைப் பயன்படுத்தி ரகசியத் தகவல்களைப் பெறும் இந்த உத்தி, உலக நாடுகளின் உளவு நடவடிக்கைகளில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருவருடன் நெருக்கத்தை ஏற்படுத்தி, அவரது நம்பிக்கையைப் பெற்று, பின்னர் அவரிடம் இருந்து ரகசியத் தகவல்களைப் பெறுவது 'ஹனி ட்ராப்' (honey trap) எனப்படுகிறது. இதற்காகக் காதல் அல்லது பாலியல் ஈர்ப்பு பயன்படுத்தப்படலாம். சில நேரங்களில் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது உரையாடல்களை வெளியிடுவதாக மிரட்டி, தகவல்களைப் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். முதல் உலகப் போர் காலம் முதல் பனிப்போர் காலம் வரை பல்வேறு நாடுகளின் உளவு நடவடிக்கைகளில் இந்த உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சமூக ஊடகங்கள், குறுஞ்செய்திச் செயலிகள் வழியாக ஒருவருடன் நேரில் சந்திக்காமலேயே நெருக்கத்தை ஏற்படுத்த முடிகிறது. இதனால், ராணுவத்தினர் மட்டுமின்றி, பாதுகாப்புத் துறை தொடர்பான தகவல்களை அறிந்திருப்பவர்களும் இத்தகைய முயற்சிகளுக்கு இலக்காகலாம். பட மூலாதாரம், INDIAN NAVY கோவையில் உள்ள ஐஎன்எஸ் அக்ரானி பயிற்சி மையத்தில் பயிற்சியில் இருந்த இந்தியக் கடற்படை வீரர் பிரதீப் முகர்ஜி, அக்டோபர் 3 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமான பெண் ஒருவரிடம் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படைத் தளம் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஆந்திரப் பிரதேச காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்குச் சில வாரங்களுக்குப் பிறகு, வேலூரில் ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் பாபு கைது செய்யப்பட்டார். வாட்ஸ்அப் மூலம் அவரைத் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத பெண் கேட்டதன் பேரில், ராணுவத் தளவாடங்கள் தொடர்பான தகவல்களை அவர் பகிர்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சில விவரங்களைப் பெறுவதற்காக ராணுவ அலுவலகங்களையும் அவர் தொடர்புகொண்டதாக ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு சம்பவங்களும் ஹனி ட்ராப் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளன. ஹனி ட்ராப் போன்ற உத்திகள் நவீன உளவு அமைப்புகள் உருவான பிறகுதான் பயன்படுத்தப்பட்டன என்று கூற முடியாது. பண்டைய இலக்கியங்களிலும் அரசியல் சிந்தனைகளிலும், ஒருவரின் தனிப்பட்ட உறவுகள் மற்றும் உணர்வுகளைப் பயன்படுத்தி அவரை வீழ்த்துவது அல்லது தகவல்களைப் பெறுவது குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. பைபிளின் பழைய ஏற்பாட்டில் வரும் சாம்சன், டெலிலா கதை இதற்கான ஓர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடப்படுகிறது. சாம்சனின் வலிமையின் ரகசியத்தை அறிய முயன்ற பிலிஸ்தியர்கள், டெலிலா மூலம் அவரிடம் இருந்து அந்தத் தகவலைப் பெறுகின்றனர். டெலிலாவின் தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகு சாம்சன் தனது வலிமையின் ரகசியத்தை வெளிப்படுத்துகிறார். இதையடுத்து அவர் பிடிக்கப்பட்டு, அவரது கண் பார்வை பறிக்கப்படுகிறது. End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம், Getty Images இந்தியாவின் பண்டைய அரசியல் நூலான அர்த்தசாஸ்திரத்திலும் உளவாளிகளைப் பயன்படுத்துவது குறித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அரசின் எதிரிகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்கும், அரசியல் எதிரிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும் பல்வேறு வகையான உளவாளிகளைப் பயன்படுத்துவது குறித்து சாணக்கியர் எழுதியுள்ளார். பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை உளவு நடவடிக்கைகளில் பயன்படுத்துவது குறித்தும் அந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. முகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சியில் ஆயிரக்கணக்கான உளவாளிகள் பணியாற்றியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அரசின் எதிரிகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைத் திரட்டுவதில் உளவாளிகள் முக்கியப் பங்கு வகித்தனர். எனினும், இந்தப் பண்டைய எடுத்துக்காட்டுகள் அனைத்தையும் இன்றைய உளவு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் ஹனி ட்ராப் முறையுடன் நேரடியாகச் சமமாகக் கருத முடியாது. ஹனி ட்ராப் என்பது நவீன சமூக ஊடகங்களுடன் உருவான உத்தி அல்ல. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் தனிப்பட்ட உறவுகளையும் மனிதர்களின் உணர்வுகளையும் பயன்படுத்தி ரகசியத் தகவல்களைப் பெற முயற்சிகள் நடந்துள்ளன. முதல் உலகப் போரின்போது உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மாதா ஹரி (Mata Hari), இதற்கான மிகவும் பிரபலமான எடுத்துக்காட்டுகளில் ஒருவர். டச்சு நடனக் கலைஞரான அவர், செல்வாக்கு மிக்க ஆண்களுடனான தனிப்பட்ட உறவுகள் காரணமாக உளவு நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டார். 1917-ஆம் ஆண்டு பிரான்ஸில் அவர் தூக்கிலிடப்பட்டார். எனினும், அவர் உண்மையில் எவ்வளவு முக்கியமான தகவல்களைப் பெற்றார் அல்லது பகிர்ந்தார் என்பது குறித்து வரலாற்றாளர்களிடையே விவாதம் உள்ளது. பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு பனிப்போர் காலத்தில் கிழக்கு ஜெர்மனியின் உளவுத்துறை, மேற்கு ஜெர்மனியின் அரசு அலுவலகங்களில் பணியாற்றிய பெண்களுடன் ஆண் உளவாளிகளை நெருக்கத்தை ஏற்படுத்தச் செய்து தகவல்களைப் பெற முயன்றது. இந்த உளவாளிகள் 'ரோமியோ உளவாளிகள்' (Romeo spies) என்று அழைக்கப்பட்டனர். பெண்கள் தங்கள் பணியின் காரணமாக அணுகக்கூடிய ரகசியத் தகவல்களைப் பெறுவதே இந்த நடவடிக்கைகளின் நோக்கமாக இருந்தது. இந்த நடவடிக்கைகள் ஹனி ட்ராப் என்பது பெண்களைப் பயன்படுத்தி ஆண்களிடம் இருந்து தகவல்களைப் பெறுவது மட்டுமல்ல என்பதை விளக்குகின்றன. ஆண்களும் பெண்களும் இத்தகைய உளவு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1960-களில் ஏற்பட்ட புரொஃப்யூமோ விவகாரமும் இந்தப் பின்னணியில் குறிப்பிடப்படுகிறது. அப்போதைய போர்த்துறைச் செயலாளர் ஜான் புரொஃப்யூமோவுக்கும் கிறிஸ்டின் கீலர் என்ற பெண்ணுக்கும் இடையிலான உறவு அரசியல் சர்ச்சையாக மாறியது. கீலருடன் தொடர்பில் இருந்த சோவியத் கடற்படை அதிகாரி யெவ்கெனி இவானோவ் மூலம் அரச ரகசியங்கள் பெறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இந்த விவகாரம் 1963-ஆம் ஆண்டு பிரிட்டனில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடையவர்கள் ஹனி ட்ராப் மூலம் தகவல்களைப் பகிர்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. 2018-ஆம் ஆண்டு, பிரம்மோஸ் ஏவுகணைத் திட்டத்தில் பணியாற்றிய பொறியாளர் நிஷாந்த் அகர்வால், போலியான சமூக ஊடகக் கணக்குகள் மூலம் தொடர்புகொண்டவர்கள் வழியாக ரகசியத் தகவல்களைப் பகிர்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். 2024-ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. எனினும், 2025-ஆம் ஆண்டு நவம்பரில் மும்பை உயர் நீதிமன்றம் உளவு மற்றும் இணையப் பயங்கரவாதம் தொடர்பான தண்டனைகளை ரத்து செய்தது. அதிகாரபூர்வ ஆவணங்களைப் பாதுகாப்பதில் உரிய கவனம் செலுத்தத் தவறிய குற்றத்துக்கான தண்டனையை நீதிமன்றம் தக்கவைத்தது. 2022-ஆம் ஆண்டு, இந்திய விமானப்படையில் பணியாற்றிய தேவேந்திர சர்மா என்ற நபர், இணையத்தில் அறிமுகமான பெண்ணிடம் ராணுவத் தளங்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அதே ஆண்டில், ராணுவ வீரர் சாந்திமோய் ராணா, இணையத்தில் அறிமுகமான பெண்களிடம் ராணுவப் பயிற்சிகள் தொடர்பான காணொலிகள் உள்ளிட்ட தகவல்களைப் பகிர்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார். 2023-ஆம் ஆண்டு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானி பிரதீப் குருல்கர், பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்பட்ட பெண்ணுடன் இணையம் வழியாகத் தொடர்புகொண்டு பாதுகாப்புத் தகவல்களைப் பகிர்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வுபெற்ற ராணுவ உளவுத்துறை அதிகாரி ஹரிஹரன், தெற்காசிய நாடுகளில் மனிதர்களை மையமாகக் கொண்ட தகவல் சேகரிப்பு தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று கூறுகிறார். "மனிதத் தகவல் சேகரிப்பு என்பது அரசின் முக்கியமான உத்திகளில் ஒன்றாகத் தொடர்ந்து இருக்கும். தொழில்நுட்பத்தின் மூலம் கிடைக்கும் தகவல்களைச் சரிபார்ப்பதற்கும், தொழில்நுட்பம் உருவாக்கப்படும் ஆரம்ப நிலையிலேயே அதைப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்கும் இது அவசியம்," என்கிறார் அவர். பட மூலாதாரம், Linkedin ராணுவத்தினர் மட்டுமின்றி, ஓய்வுபெற்ற அதிகாரிகளும் இலக்காகலாம் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) சர்வதேச ஆய்வுகளுக்கான பள்ளி (School of International Studies), இணைப் பேராசிரியரர் ஜெகநாத், பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "ஓய்வுபெற்ற அதிகாரிகளிடம் தற்போதைய ராணுவ நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் இல்லாவிட்டாலும், ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் ராணுவக் கட்டமைப்புகள் குறித்த அனுபவ அறிவு இருக்கலாம். ஆயுதங்கள் மற்றும் கட்டமைப்புகள் காலப்போக்கில் மாறினாலும், அவற்றைப் பற்றிய சில அடிப்படைத் தகவல்கள் தொடர்ந்து பயனுள்ளதாக இருக்கலாம். எதிரி நாடுகளுக்கு சிறிய தகவல்கூட முக்கியமானதாக இருக்கக்கூடும். இதனால், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் இலக்காகலாம்," என்கிறார் ஜெகநாத். பணியில் இருக்கும் ராணுவத்தினருக்கு செல்பேசிப் பயன்பாடு மற்றும் சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வது தொடர்பாகப் பல கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். 2019-ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு இந்தக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார். "ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கு அதே அளவிலான கட்டுப்பாடுகள் இல்லை. அவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவின் மீது நாட்டுப்பற்று கொண்டவர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொள்பவர்கள் அவர்களைத் தொடர்புகொள்ளும்போது, அவர்கள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது," என்கிறார் ஜெகநாத். பெண்களுக்கு பயிற்சித் திட்டங்கள் வழங்கப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, போலியான அடையாளங்களுடன் ராணுவத்தினரை அணுகும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். ஹனி ட்ராப் உள்ளிட்ட இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக இந்திய ராணுவம்எம்ஷீல்டு 2.0 (MShield 2.0) என்ற செயலியைப் பயன்படுத்துவதாக 2025-ஆம் ஆண்டு செய்திகள் வெளியாகின. மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, ராணுவத்தினர் தங்கள் செல்பேசிகளில் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுகிறார்களா என்பதை மதிப்பிடவும், தடை செய்யப்பட்ட செயலிகள் நிறுவப்பட்டுள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும் இந்தச் செயலி உருவாக்கப்பட்டது. சந்தேகத்துக்குரிய தொடர்புகள் குறித்த தகவல்களைப் பகிரும் வசதியும் இதில் இருப்பதாக அந்தச் செய்தி குறிப்பிட்டது. எம்ஷீல்டு 2.0 பணியில் இருக்கும் ராணுவத்தினருக்கானது என்றும், ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு இந்தச் செயலி கிடைப்பதில்லை என்றும் ஜெகநாத் கூறுகிறார். இதனால், பணியில் இருக்கும் ராணுவத்தினருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். பட மூலாதாரம், Getty Images இந்திய விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், சமூக ஊடகங்கள் மற்றும் பிற இணையத்தளங்கள் வழியாகப் பழகும் நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு விமானப்படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். தனிப்பட்ட உறவுகளைப் பயன்படுத்தி முக்கியமான தகவல்களைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் டெல்லியில் நடந்த நிகழ்வு ஒன்றில் அண்மையில் தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டில் ஒரு மாதத்துக்குள் நடந்துள்ள இந்த இரண்டு சம்பவங்களும் ஹனி ட்ராப் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளன. பணியில் இருக்கும் ராணுவத்தினர் மட்டுமின்றி, ஓய்வுபெற்ற அதிகாரிகளும் இத்தகைய முயற்சிகளுக்கு இலக்காகலாம் என்பதுடன், சமூக ஊடகங்கள் வழியாகத் தகவல்களைப் பெறும் முயற்சிகளை அடையாளம் காண்பதும் அவற்றைத் தடுப்பதும் பாதுகாப்புத் துறைக்கு உள்ள சவால்களாக உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை